Asianet News TamilAsianet News Tamil

ஐபிஎல்லில் இல்லையென்றால் என்ன, மேஜர் லீக் கிரிக்கெட்டில் சாம்பியனான MI நியூயார்க்!

அமெரிக்காவில் நடந்த மேஜர் லீக் கிரிக்கெட் தொடரில் நீடா அம்பானியின் MI நியூயார்க் அணி சாம்பியன் பட்டத்தைத் தட்டிச் சென்றது.

Mi New York Became Champion In First Major League Cricket 2023 At Dallas
Author
First Published Jul 31, 2023, 11:09 AM IST

இந்தியாவில் நடத்தப்பட்டு வரும் ஐபிஎல் தொடர் போன்று வெளிநாடுகளில் மேஜர் லீக் கிரிக்கெட் தொடர் முதல் முறையாக தொடங்கப்பட்டது. முதல் முறையாக தொடங்கப்பட்ட இந்த சீசனில் லாஸ் ஏஞ்சல்ஸ் நைட் ரைடர்ஸ், MI நியூயார்க், சான் பிரான்சிஸ்கோ யுனிகார்ன்ஸ், சியாட்டில் ஓர்காஸ், டெக்ஸாஸ் சூப்பர் கிங்ஸ் மற்றும் வாஷிங்டன் ஃப்ரீடம் என்று மொத்தம் 6 அணிகள் இடம் பெற்றன. இதில், நீடா அம்பானியின் அணியும் ஒன்று.

மக்களவைத் தேர்தல் காரணமாக ஐபிஎல் 2024 தொடரில் மாற்றமா?

கடந்த 13 ஆம் தேதி தொடங்கப்பட்ட இந்த தொடரில் ஒவ்வொரு அணியும் 5 போட்டிகளில் விளையாடின. இதில், சான் பிரான்சிஸ்கோ மற்றும் லாஸ் ஏஞ்சல்ஸ் ஆகிய அணிகள் புள்ளிப்பட்டியலில் கடைசி 2 இடங்களை பிடித்து பிளே ஆஃப் வாய்ப்பை இழந்து வெளியேறின. இதையடுத்து நியூயார்க், டெக்ஸாஸ் சூப்பர் கிங்ஸ், வாஷிங்டன், சியாட்டில் ஆகிய அணிகள் பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதி பெற்றன.

மும்பை அணிக்கு எதிராக பந்து வீசி விக்கெட் கைப்பற்றிய ஜஸ்ப்ரித் பும்ரா!

கடைசியாக நேற்று நடந்த இறுதிப் போட்டியில் சியாட்டில் அணியும் நியூயார்க அணியும் மோதின. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற MI நியூயார்க் அணி பவுலிங் தேர்வு செய்தது. அதன்படி, முதலில் ஆடிய நியூயார்க் சியாட்டில் அணியின் தொடக்க வீரர் குயிண்டன் டி காக் அதிரடியாக ஆடி ரன்கள் சேர்த்தார் அவர் 52 பந்துகளில் 9 பவுண்டரி, 4 சிக்ஸர்கள் உள்பட 87 ரன்களில் ஆட்டமிழந்தார்.

2028 லாஸ் ஏஞ்சல்ஸ் ஒலிம்பிக்கில் 5 அணிகள் கொண்ட டி20 கிரிக்கெட் போட்டிக்கு வாய்ப்பு!

அதன் பிறகு வந்த வீரர்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தாலும் சியாட்டில் அணி 20 ஓவர்களில் 9 விக்கெட் இழப்பிற்கு 183 ரன்கள் குவித்தது. பின்னர், கடின இலக்கை துரத்திய நியூயார்க் அணியில் தொடக்க வீரர்கள் ஸ்டீவன் டெய்லர் டக் அவுட்டிலும், ஷயான் ஜஹாங்கீர் 10 ரன்னிலும் ஆட்டமிழந்து அதிர்ச்சி கொடுத்தனர். அதன் பிறகு தான் வெஸ்ட் இண்டீஸ் வீரர் நிக்கோலஸ் பூரன் களமிறங்கி அதிரடியாக ஆடி ரசிகர்களுக்கு விருந்து கொடுத்தார். அவர், 55 பந்துகளில் 10 பவுண்டரி, 13 சிக்சர்கள் உள்பட 137 ரன்கள் சேர்த்து கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்தார். இதன் மூலமாக நியூயார்க் அணி 16 ஓவர்களில் 3 விக்கெட் இழப்பிற்கு 184 ரன்கள் எடுத்து 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

 

 

அதுமட்டுமின்றி அணியையும் வெற்றி பெறச் செய்துள்ளார். இந்த தொடர் மூலமாக மொத்தமாக மும்பை அணி 9 முறை சாம்பியனாகியுள்ளது. ஐபிஎல் தொடரில் 5 முறை சாம்பியன், சாம்பியன் லீக் டி20யில் 2 முறை சாம்பியன், மகளிர் பிரீமியர் லீக்கில் ஒரு முறையும், மேஜர் லீக் கிரிக்கெட்டில் ஒரு முறையும் மும்பை அணி சாம்பியனாகியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

WI vs IND: 3ஆவது ODIயிலும் இந்தியாவை வீழ்த்தி தொடரை கைப்பற்றுவோம் – ஷாய் ஹோப்!

 

 

Follow Us:
Download App:
  • android
  • ios