Asianet News TamilAsianet News Tamil

மயன்க் அகர்வால் இரட்டை சதம் அடித்து சாதனை.. மெகா ஸ்கோரை நோக்கி இந்திய அணி

தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணியின் தொடக்க வீரர் மயன்க் அகர்வால் அபாரமாக ஆடி இரட்டை சதம் அடித்து சாதனை படைத்தார்.

mayank agarwal scores his first double century in test cricket
Author
Vizag, First Published Oct 3, 2019, 2:27 PM IST

விசாகப்பட்டினத்தில் நடந்துவரும் இந்தியா - தென்னாப்பிரிக்கா இடையேயான முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி முதலில் பேட்டிங் ஆடிவருகிறது. டெஸ்ட் கிரிக்கெட்டில் இந்த இன்னிங்ஸில்தான் முதன்முறையாக ரோஹித் சர்மா தொடக்க வீரராக களமிறங்கினார். ரோஹித்தும் மயன்க் அகர்வாலும் இணைந்து முதன்முறையாக இந்த போட்டியில்தான் தொடக்க ஜோடியாக இறங்கினர். 

mayank agarwal scores his first double century in test cricket

ரோஹித் சர்மா டெஸ்ட் கிரிக்கெட்டில் முதன்முறையாக தொடக்க வீரராக இறங்கியதால் அனைவரின் கவனமும் பார்வையும் ரோஹித் மீதே இருந்தது. அவரும் டெஸ்ட் அணியில் தனக்கான இடத்தை தக்கவைக்க, சிறப்பாக ஆடி ஸ்கோர் செய்ய வேண்டிய கட்டாயத்தில் இருந்தார். ஆனால் தனக்கு இருந்த நெருக்கடியை மண்டைக்கு ஏற்றாமல் தனது இயல்பான ஆட்டத்தை ஆடி சதமடித்தார் ரோஹித் சர்மா. 

mayank agarwal scores his first double century in test cricket

ரோஹித் சர்மாவுக்கு நன்றாக ஒத்துழைப்பு கொடுத்து ஆடிய மயன்க் அகர்வாலும் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தி சதமடித்தார். இருவருமே சதமடித்து அசத்தினர். முதல் விக்கெட்டுக்கு இருவரும் இணைந்து 317 ரன்களை குவித்தனர். ரோஹித் சர்மா 176 ரன்களில் ஆட்டமிழந்து, டெஸ்ட் கிரிக்கெட்டில் முதல் இரட்டை சதமடிக்க கிடைத்த அரிய வாய்ப்பை தவறவிட்டார். 

ஆனால் ரோஹித் செய்த தவறை மயன்க் அகர்வால் செய்யவில்லை. சதத்திற்கு பின்னரும் நிதானமாகவும் தெளிவாகவும் ஆடிய மயன்க் அகர்வால், அதேநேரத்தில் அடிக்க வேண்டிய பந்துகளை பவுண்டரிக்கும் சிக்ஸருக்கும் விளாசி மளமளவென ஸ்கோர் செய்தார். 

மயன்க் அகர்வால் ஒருமுனையில் நங்கூரமிட்டு நின்று ஆட, மறுமுனையில் புஜாரா, கோலி ஆகியோர் பெரிதாக சோபிக்காமல் வெளியேறினர். புஜாரா 6 ரன்களிலும் கோலி வெறும் 20 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். அதன்பின்னர் மயன்க் அகர்வாலுடன் ரஹானே ஜோடி சேர்ந்தார். சிங்கிள் ரொடேட் செய்ததுடன், ஸ்ட்ரைட் டிரைவ், கவர் டிரைவ், புல் ஷாட், ஸ்வீப், ரிவர்ஸ் ஸ்வீப் என அனைத்துவகையான ஷாட்டுகளையும் அபாரமாக ஆடிய மயன்க் அகர்வால், இரட்டை சதம் அடித்து அசத்தினார். 

mayank agarwal scores his first double century in test cricket

தனது முதல் சதத்தையே இரட்டை சதமாக மாற்றி சாதனையும் படைத்தார். இரட்டை சதத்திற்கு பிறகும் தொடர்ந்து சிறப்பாக ஆடிவருகிறார் மயன்க் அகர்வால். மயன்க் அகர்வால் எந்தவொரு சூழலிலும் திணறவோ தடுமாறவோ கிடையாது. மிகத்தெளிவான ஒரு பேட்டிங்.  மயன்க் அகர்வால் இரட்டை சதம் அடித்தது மட்டுமல்லாமல் இந்திய அணியின் ஸ்கோரும் 400 ரன்களை கடந்துவிட்டது. ஆனால் ரஹானே 15 ரன்களில் அவுட்டானார். இதையடுத்து மயன்க் அகர்வாலுடன் ஹனுமா விஹாரி ஜோடி சேர்ந்துள்ளார். 

Follow Us:
Download App:
  • android
  • ios