Asianet News TamilAsianet News Tamil

நியூசிலாந்து கிரிக்கெட் வாரியத்தின் ஒப்பந்தத்தில் இருந்து நீக்கப்பட்ட மார்டின் கப்டில்..! சர்வதேச கெரியர் ஓவர்

நியூசிலாந்து கிரிக்கெட் அணியின் சீனியர் வீரரான மார்டின் கப்டில் நியூசிலாந்து கிரிக்கெட் வாரிய ஒப்பந்தத்தில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளார்.
 

martin guptill released from new zealand cricket central contract list
Author
First Published Nov 24, 2022, 7:59 PM IST

நியூசிலாந்து கிரிக்கெட்டின் ஆல்டைம் சிறந்த கிரிக்கெட்டர்களில் ஒருவர் மார்டின் கப்டில். 2009ம் ஆண்டு சர்வதேச கிரிக்கெட்டில் நியூசிலாந்து அணியில் அறிமுகமான மார்டின் கப்டில் 47 டெஸ்ட், 198 ஒருநாள் மற்றும் 122 டி20 போட்டிகளில் ஆடி முறையே 2586, 7346 மற்றும் 3531 ரன்கள் அடித்துள்ளார். 

சர்வதேச ஒருநாள் கிரிக்கெட்டில் அதிகபட்ச ஸ்கோர் அடித்த 2வது வீரர் என்ற சாதனைக்கு சொந்தக்காரர். ரோஹித் சர்மாவுக்கு (264 ரன்கள்) அடுத்து 237 ரன்களுடன் 2வது இடத்தில் உள்ளார். சர்வதேச கிரிக்கெட்டில் நியூசிலாந்து அணியில் பல்வேறு சாதனைகளுக்கு சொந்தக்காரரான  மார்டின் கப்டில், அண்மைக்காலமாக பெரிதாக ஆடவில்லை.

NZ vs IND: முதல் ODI-க்கு வாசிம் ஜாஃபர் தேர்வு செய்த இந்திய அணியின் ஆடும் லெவன்! ரிஷப்-சாம்சன் ரசிகர்கள் மோதல்

அவர் அதிரடி வீரராக இருந்தாலும், கிரிக்கெட்டில் பேட்ஸ்மேன்களின் அணுகுமுறை மாறிவிட்ட இந்த காலக்கட்டத்தில், அடுத்த தலை முறை வீரர்களுக்கு வழிவிட வேண்டிய கட்டாயம் உள்ளது. டி20 உலக கோப்பைக்கான நியூசிலாந்து அணியில் மார்டின் கப்டில் இருந்தும் கூட, இளம் அதிரடி தொடக்க வீரர் ஃபின் ஆலன் தான் தொடக்க வீரராக ஆடினார்.

டி20 உலக கோப்பையில் ஆடாத மார்டின் கப்டில், இந்தியாவுக்கு எதிரான டி20 தொடரிலும் ஆடவில்லை. இந்நிலையில், அவர் நியூசிலாந்து கிரிகெட் வாரியத்தின் ஒப்பந்தத்திலிருந்து நீக்கப்பட்டுள்ளார். அவர்தான் தனது பெயரை ஒப்பந்தத்தில் இருந்து நீக்குமாறு கேட்டுக்கொண்டதாகவும், அதனடிப்படையில் தான் நீக்கியதாகவும் நியூசிலாந்து கிரிக்கெட் வாரியம் தெரிவித்துள்ளது.

தொடர்ச்சியாக 5 சதங்கள் அடித்தது எப்படி? ஏலத்திற்கு முன் தன்னை அணுகிய ஐபிஎல் அணி.! மனம் திறந்த நாராயண் ஜெகதீசன்

இந்த ஆண்டு காலின் டி கிராண்ட்ஹோம் மற்றும் டிரெண்ட் போல்ட்டுக்கு அடுத்தபடியாக மார்டின் கப்டில் ஒப்பந்தத்தில் இருந்து நீக்கப்பட்டுள்ளார். மார்டின் கப்டில் இன்னும் சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு அறிவிக்கவில்லை. கூடிய விரைவில் அவர் ஓய்வு அறிவிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
 

Follow Us:
Download App:
  • android
  • ios