இந்திய அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் செய்து 3 ஒருநாள், 3 டி20 மற்றும் 4 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் ஆடவுள்ளது. முதலில் ஒருநாள், அதன்பின்னர்  டி20 தொடரும் நடக்கிறது. கடைசியாக டெஸ்ட் தொடர் நடக்கவுள்ளது. முதல் டெஸ்ட் போட்டி அடிலெய்டில் நடக்கிறது.

அந்த போட்டிக்கான ஆஸ்திரேலிய அணியை மார்க் டெய்லர் தேர்வு செய்துள்ளார். தொடக்க வீரர்களாக வார்னர் மற்றும் 22 வயது இளம் வீரரான புகோவ்ஸ்கி ஆகிய இருவரையும் தேர்வு செய்துள்ளார். அனுபவ வீரரான ஜோ பர்ன்ஸுக்கு அணியில் இடம் கிடைக்கவில்லை. 

 மார்னஸ் லபுஷேன், ஸ்மித் ஆகிய வீரர்கள் நிரந்தர வீரர்கள். மேத்யூ வேட், டிராவிஸ் ஹெட் ஆகியோரை மிடில் ஆர்டரில் தேர்வு செய்துள்ளார். கேப்டன் டிம் பெய்ன். ஃபாஸ்ட் பவுலர்களாக கம்மின்ஸ், ஸ்டார்க், ஹேசில்வுட் ஆகியோரையும் ஸ்பின்னராக நேதன் லயனையும் தேர்வு செய்துள்ளார்.

அடிலெய்டு டெஸ்ட்டுக்கான மார்க் டெய்லர் தேர்வு செய்த ஆஸ்திரேலிய ஆடும் லெவன்:

டேவிட் வார்னர், வில் புகோவ்ஸ்கி, மார்னஸ் லபுஷேன், ஸ்டீவ் ஸ்மித், மேத்யூ வேட், டிராவிஸ் ஹெட், டிம் பெய்ன்(கேப்டன், விக்கெட் கீப்பர்), பாட் கம்மின்ஸ், மிட்செல் ஸ்டார்க், நேதன் லயன், ஹேசில்வுட்.

12வது வீரர்: ஜேம்ஸ் பாட்டின்சன்

13வது வீரர்: கேமரூன் க்ரீன்.