குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணியானது தோற்க வேண்டும் ஆசைப்பட்ட ரசிகர்களுக்கு உண்மையில் நிறைவேறிய மகிழ்ச்சியில் மீம்ஸ் போட்டுள்ளனர்.
ஐபிஎல் தொடர் தொடங்குவதற்கு முன்பிருந்தே ஹர்திக் பாண்டியா மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டனாக நியமிக்கப்பட்டதற்கு பலரும் எதிர்ப்பும், ஆதரவும் தெரிவித்தனர். ரோகித் சர்மா கூட புதிய கேப்டனுக்கு வாழ்த்து தெரிவிக்கவில்லை. அதன் பிறகு நடந்த அடுத்தடுத்து சம்பவங்கள் ரோகித் சர்மா மற்றும் ஹர்திக் பாண்டியா ரசிகர்களுக்கிடையில் வாக்குவாதத்தை ஏற்படுத்தியது.
பீல்டிங்கில் அங்கும், இங்கும் ஓட வைத்த பாண்டியா – விரக்தியோடு பேசிய ரோகித் சர்மா – வைரல் வீடியோ!
இதையெல்லாம் தாண்டி நேற்றைய போட்டியில் ரோகித் சர்மாவை பவுண்டரி லைனுக்கு அனுப்பி வைத்து அலைக்கழித்துள்ளார். எப்போதும், ரோகித் சர்மா 30 யார்டுக்குள் தான் நின்று பீல்டிங் செய்வார். சில போட்டிகளில் அவர் பவுண்டரி லைனில் நின்றிருக்கிறார். ஆனால், நேற்று நடந்த குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு எதிரான போட்டியின் கடைசி ஓவரில் எஞ்சிய 2, 3 பந்துகளுக்கு ரோகித் சர்மாவை பவுண்டரி லைனுக்கு அனுப்பி வைத்து அலைக்கழித்துள்ளார். இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானது.
இதையடுத்து ஹர்திக் பாண்டியாவின் செயலால், ஆத்திரமடைந்த ரோகித் சர்மா ரசிகர்கள் இந்தப் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் தோற்க வேண்டும் என்று ஆசைப்பட்டு மீம்ஸ் வெளியிட்டுள்ளனர். மேலும், ரோகித் சர்மா மீண்டும் கேப்டனாக வரவேண்டும் என்றும், கேப்டன் பதவியிலிருந்து ரோகித் சர்மாவை நீக்கலாம், ஆனால், எங்களது மனதிலிருந்து ரோகித் சர்மாவை நீக்க முடியாது என்று ரசிகர்கள் பதிவிட்டு வருகின்றனர்.
கேப்டனாக சாதித்து காட்டிய சுப்மன் கில் – அகமதாபாத்தில் மண்ணை கவ்விய ஹர்திக் பாண்டியா அண்ட் கோ!
இந்தப் போட்டியில் ஆரம்பம் முதலே வருத்தமாக இருந்த ரோகித் சர்மா போட்டிக்கு பிறகு கூலாக சிரித்துக் கொண்டிருந்த வீடியோ வைரலானது. குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு எதிராக நடந்த 5ஆவது போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணியானது கடைசியில் 6 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது. இந்த தோல்வியின் மூலமாக கடந்த 12 ஆண்டுகளாக ஐபிஎல் தொடரின் முதல் போட்டியில் தோல்வி அடைந்த முதல் அணி என்ற மோசமான சாதனையை படைத்துள்ளது.
