Asianet News TamilAsianet News Tamil

தோனி அவசரப்பட்டு ஓய்வு பெறக்கூடாது.. அவருக்கு ஒரு பெரிய கடமை இருக்கு.. மலிங்கா அதிரடி

தோனி உலக கோப்பையுடன் ஓய்வுபெறக்கூடும் என்ற கருத்து வேகமாக பரவிவரும் நிலையில், தோனி எப்போது ஓய்வு பெற வேண்டும் என்று மலிங்கா தனது கருத்தை தெரிவித்துள்ளார்.

malinga opinion about when dhoni will be retired
Author
England, First Published Jul 5, 2019, 4:57 PM IST

தோனியை இந்திய கிரிக்கெட்டின் அத்தியாயம் என்றே கூறலாம். கடந்த 2004ம் ஆண்டு இந்திய அணியில் அறிமுகமான தோனி, 2007ம் ஆண்டே இந்திய அணியின் கேப்டன் ஆனார். 

இந்திய அணிக்கு மூன்று விதமான சர்வதேச கோப்பைகளையும் வென்று கொடுத்த கேப்டன் தோனி. 2007 டி20 உலக கோப்பை, 2013ல் சாம்பியன்ஸ் டிராபி, 2011ல் ஒருநாள் கிரிக்கெட் உலக கோப்பை என மூன்று சர்வதேச கோப்பைகளையும் வென்றுகொடுத்தார். இதுவரை அனைத்துவிதமான சர்வதேச கோப்பைகளையும் வென்ற ஒரே கேப்டன் தோனி தான். 

கடந்த 2014ம் ஆண்டு டெஸ்ட் கேப்டன்சியில் இருந்து ஒதுங்கிய தோனி, 2017ம் ஆண்டு ஒருநாள் மற்றும் டி20 அணியின் கேப்டன்சியில் இருந்தும் விலகினார். அதன்பிறகு விராட் கோலியின் கேப்டன்சியில் அணியில் சீனியர் வீரராக ஆடிவருகிறார். 

தோனி ஓராண்டுக்கும் மேலாக ஃபார்மில் இல்லாமல் சரியாக ஆடாததால் கடும் விமர்சனங்களை எதிர்கொண்டுவந்த நிலையில், இந்த ஆண்டின் தொடக்கத்தில் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒருநாள் தொடரில் ஹாட்ரிக் அரைசதம் அடித்து ஃபார்முக்கு வந்து மிரட்டினார். உலக கோப்பையில் தோனி ஆடிவருகிறார். 

malinga opinion about when dhoni will be retired

உலக கோப்பையில் தோனியின் மந்தமான பேட்டிங் விமர்சனத்துக்கு உள்ளாகிவரும் நிலையில், அவருக்கு ஆதரவாக கேப்டன் கோலி குரல் கொடுத்திருந்தார். இந்த உலக கோப்பையுடன் தோனி ஓய்வுபெற்றுவிடுவார் என்ற கருத்து உள்ளது. தோனியின் ஓய்வு முடிவை அவர்தான் எடுப்பார். எனினும் அவர் கேப்டன்சியிலிருந்து விலகும் முடிவை திடீரென தான் அறிவித்தார். அதனால் அவர் என்ன நினைக்கிறார், என்ன செய்வார் என்பதை கணிப்பது கடினம். கேப்டன்சியில் இருந்து விலகியதை போலவே ஓய்வு முடிவையும் திடீரென அறிவிக்கக்கூடும் என பிசிசிஐ அதிகாரி ஒருவர் பிடிஐ செய்தி நிறுவனத்திடம் தெரிவித்திருந்தார்.

malinga opinion about when dhoni will be retired

எனவே தோனி உலக கோப்பையுடன் ஓய்வுபெறக்கூடும் என்ற கருத்து பரவியது. இந்நிலையில், தோனி எப்போது ஓய்வு பெற வேண்டும் என்ற தனது கருத்தை மலிங்கா தெரிவித்துள்ளார். இதுகுறித்து பேசியுள்ள மலிங்கா, தோனி இன்னும் ஒன்று அல்லது இரண்டு ஆண்டுகள் இந்திய அணியில் ஆட வேண்டும். தற்போதும் கூட உலகின் சிறந்த ஃபினிஷர் தோனிதான். எனவே அவரை இடத்தை பூர்த்தி செய்ய ஒரு வீரரை உருவாக்கிவிட்டுத்தான் அவர் ஓய்வு பெற வேண்டும். தோனியின் இடத்தை பூர்த்தி செய்வது மிகவும் கடினம். ஆனால் அந்த இடத்தை பூர்த்தி செய்யும் வீரரை அடையாளம் கண்டு அவர் சற்று செட்டாகிவிட்ட பிறகுதான் தோனி ஓய்வு பெற வேண்டும். இளம் வீரர்கள் தோனியிடம் இருந்தும் அவரை பார்த்தும் நிறைய கற்றுக்கொள்ள வேண்டும் என்று மலிங்கா தெரிவித்துள்ளார். 
 

Follow Us:
Download App:
  • android
  • ios