Asianet News TamilAsianet News Tamil

ரஞ்சி டிராபி: ஆந்திராவை வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறியது மத்திய பிரதேசம்

ரஞ்சி தொடர் காலிறுதியில் ஆந்திராவை 5 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி மத்திய பிரதேச அணி அரையிறுதிக்கு தகுதி பெற்றுள்ளது.
 

madhya pradesh beat andhra by 5 wickets in quarter final and qualify to semi final of ranji trophy
Author
First Published Feb 3, 2023, 7:29 PM IST

ரஞ்சி தொடர் விறுவிறுப்பாக நடந்துவந்த நிலையில், இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. கர்நாடகா, பெங்கால், ஆந்திரா, ஜார்கண்ட், மத்திய பிரதேசம், பஞ்சாப், உத்தரகண்ட், சௌராஷ்டிரா அணிகள் காலிறுதிக்கு முன்னேறின.

காலிறுதியில் ஜார்கண்டை வீழ்த்தி பெங்கால் அணியும், உத்தரகண்டை வீழ்த்தி கர்நாடகா அணியும் அரையிறுதிக்கு முன்னேறின. ஆந்திரா - மத்திய பிரதேசம் இடையேயான காலிறுதி போட்டியில் மத்திய பிரதேச அணி அபார ஆடி வெற்றி பெற்றது.

பாகிஸ்தானை பார்த்து காப்பி அடிக்கிறது இந்திய அணி - ரமீஸ் ராஜா

ஆந்திரா - மத்திய பிரதேசம் இடையேயான போட்டியில் முதலில் பேட்டிங் ஆடிய ஆந்திரா அணியில் அபாரமாக பேட்டிங் ஆடிய ரிக்கி பூய் (149) மற்றும் கரன் ஷிண்டே(110)  ஆகிய இருவரும் சதமடித்ததால் அந்த அணி முதல் இன்னிங்ஸில் 379 ரன்களை குவித்தது. இதையடுத்து முதல் இன்னிங்ஸை ஆடிய மத்திய பிரதேச அணி வெறும் 228 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.

IND vs AUS டெஸ்ட் தொடர்: விராட் கோலிக்கு இர்ஃபான் பதான் உருப்படியான அட்வைஸ்

151 ரன்கள் முன்னிலையுடன் 2வது இன்னிங்ஸை ஆடிய ஆந்திரா அணி வெறும் 98 ரன்களுக்கு ஆல் ஆவுட்டாக, 249 ரன்கள் முன்னிலை பெற, 250 ரன்கள் என்ற இலக்கை விரட்டிய மத்திய பிரதேச அணியில் தொடக்க வீரர் யஷ் துபே(58) மற்றும் ரஜத் பட்டிதார் (55) ஆகிய இருவரும் அரைசதம் அடிக்க, 77 ஓவரில் இலக்கை அடித்து 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற மத்திய பிரதேச அணி அரையிறுதிக்கு முன்னேறியது.

Follow Us:
Download App:
  • android
  • ios