டி20 உலக கோப்பைக்கு முன்னாள் வீரர் மதன் லால் தேர்வு செய்துள்ள இந்திய அணியை பார்ப்போம். 

டி20 உலக கோப்பைக்கான நியூசிலாந்து, ஆஸ்திரேலியா, பாகிஸ்தான் ஆகிய அணிகள் அறிவிக்கப்பட்டுவிட்ட நிலையில், இந்திய அணி இன்று இரவு அறிவிக்கப்படுகிறது.

இதற்கிடையே, முன்னாள் வீரர்கள் பலரும் டி20 உலக கோப்பைக்கான இந்திய அணியை தேர்வு செய்துவருகின்றனர். அந்தவகையில், முன்னாள் வீரர் மதன் லால் தேர்வு செய்த அணியை பார்ப்போம்.

ரோஹித் சர்மா, கேஎல் ராகுல் ஆகிய 2 தொடக்க வீரர்களுடன் ஷிகர் தவானையும் மதன் லால் தேர்வு செய்துள்ளார். கேப்டன் விராட் கோலி. அதன்பின்னர் சூர்யகுமார் யாதவ், ரிஷப் பண்ட் ஆகியோரை தேர்வு செய்துள்ள மதன் லால், ஒருநாள் மற்றும் டி20 கிரிக்கெட்டில் இந்திய அணியின் 4ம் வரிசை விரராக ஆடிவந்த ஷ்ரேயாஸ் ஐயரை புறக்கணித்துள்ளார்.

ஆல்ரவுண்டர்கள் ஹர்திக் பாண்டியா, ஷர்துல் தாகூர் ஆகியோரையும், ஸ்பின்னர்களாக ஜடேஜா, சாஹல், அக்ஸர் படேல் ஆகிய மூவரையும் தேர்வு செய்துள்ள மதன் லால், வாஷிங்டன் சுந்தர், ராகுல் சாஹர் ஆகியோரை புறக்கணித்துள்ளார்.

ஃபாஸ்ட் பவுலர்களாக ஷமி, தீபக் சாஹர், புவனேஷ்வர் குமார், பும்ரா ஆகியோரை எடுத்துள்ளார். நடராஜனை புறக்கணித்துள்ளார்.

மதன் லால் தேர்வு செய்த டி20 உலக கோப்பைக்கான இந்திய அணி:

ரோஹித் சர்மா, கேஎல் ராகுல், ஷிகர் தவான், விராட் கோலி(கேப்டன்), ஹர்திக் பாண்டியா, சூர்யகுமார் யாதவ், ரிஷப் பண்ட், ஷர்துல் தாகூர், ஜடேஜா, பும்ரா, முகமது ஷமி, தீபக் சாஹர், புவனேஷ்வர் குமார், அக்ஸர் படேல், யுஸ்வேந்திர சாஹல்.