Asianet News TamilAsianet News Tamil

ஏம்ப்பா என் வீட்டை நானே திறந்து வைக்கலாமா ? தோனி பெவிலியனை திறந்து வைக்க மறுத்த தோனி !!

ஜார்கண்ட் மாநிலம் ராஞ்சி கிரிக்கெட் மைதானத்தில் புதிதாகக கட்டப்பட்டுள்ள எம்.எஸ்.தோனி பெவிலியனை திறந்து வைக்க தோனி மறுத்து விட்டதையடுத்து ஜார்க்கண்ட் கிரிக்கெட்  சங்கமே அதை திறந்து வைத்துள்ளது.
 

m.s.dhoni ranchi cricket
Author
Ranchi, First Published Mar 7, 2019, 11:45 PM IST

மும்பை வான்கடே மைதானத்தில் உள்ள கேலரியின் ஒரு பகுதிக்கு கவாஸ்கர் பெயர் சூட்டப்பட்டுள்ளது. அதேபோல், டெல்லி பெரோஸ் ஷா கோட்லா மைதனாத்தில் உள்ள ஒரு நுழைவாயிலுக்கு சேவாக் பெயர் சூட்டப்பட்டுள்ளது.

இந்நிலையில் இந்தியாவுக்கு இரண்டு உலகக்கோப்பையை வாங்கிக் கொடுத்த  ஒரே கேப்டன் என்ற பெருமையை பெற்றுள்ள எம்எஸ் தோனிக்கு அவரது சொந்த மாநிலமான ஜார்க்கண்ட். , ராஞ்சி மைதானத்தின் வடக்கு பெவிலியனுக்கு அவர்  பெயரை  சூட்ட ஜார்க்கண்ட் கிரிக்கெட் சங்கம் முடிவு செய்தது. கடந்த 2017-ம் ஆண்டு நடைபெற்ற பொதுக்குழு கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டது.

m.s.dhoni ranchi cricket

இதையடுத்து ராஞ்சி கிரிக்கெட் மைதானத்தில் தோனியின் பெயரில் ஒரு பெவிலியன் கட்டப்பட்டுள்ளது.  நாளை  இந்தியா - ஆஸ்திரேலியா இடையிலான 3-வது ஒருநாள் கிரிக்கெட் போட்டி ராஞ்சி மைதானத்தில் நடைபெறுகிறது. 

இந்த போட்டியின்போது எம்எஸ் தோனி பெயர் சூட்டப்பட்ட பெவிலியனை திறந்து வைக்க ஜார்க்கண்ட் கிரிக்கெட் சங்கம். தோனியை அழைத்தது. ஆனால்  இதற்கு மறுப்புத் தெரிவித்ததோடு  இந்த மைதானத்தில் நான் அங்கமாக இருக்கிறேன். எனது வீட்டை நானே  எப்படி திறந்து வைப்பது என கேள்வி எழுப்பியுள்ளார்.

m.s.dhoni ranchi cricket

தோனி கூறியதில் இருந்த நியாயத்தைப் புரிந்து கொண்ட ஜார்க்கண்ட் கிரிக்கெட் சங்கத்தின்ர் அவர்களே அந்த பெவிலியனை திறந்து வைத்தனர்.

வீரர்கள் டிரஸிங் அறையில் இருந்து பார்த்தால் எம்எஸ் தோனியின் பெயர் கம்பீரமாக காட்சியளிக்கும் வகையில் அந்த பெவிலியன் கட்டப்பட்டுளளது.. 

m.s.dhoni ranchi cricket

ராஞ்சி மைதானத்தில் இந்தியா- ஆஸ்திரேலியா இடையிலான மூன்றாவது ஒருநாள் ஆட்டம் நாளை நடைபெறவுள்ள நிலையில் தோனி பெவிலியன் திற்ந்து வைக்கப்பட்டதில் அவரது ரசிகள்த மிகுந்த உற்சாகம் அடைந்துள்ளனர்.

Follow Us:
Download App:
  • android
  • ios