Asianet News TamilAsianet News Tamil

சுஜய் அதிரடி ஆட்டம்; லைகா கோவை கிங்ஸ் சிம்பிள் வெற்றி!

பா11சி திருச்சி அணிக்கு எதிரான போட்டியில் லைகா கோவை கிங்ஸ் அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

Lyca Kovai Kings won by 6 wickets against Ba11sy Trichy in 12th Match of TNPL 2023
Author
First Published Jun 22, 2023, 12:23 AM IST

தமிழ்நாடு பிரீமியர் லீக் தொடரின் 12 ஆவது போட்டியில் பா11சி திருச்சி அணியும், லைகா கோவை கிங்ஸ் அணியும் மோதின. இதில், டாஸ் வென்ற லைகா கோவை கிங்ஸ் அணி முதலில் பந்து வீச்சு தேர்வு செய்தது. அதன்படி முதலில் ஆடிய பா11சி திருச்சி அணியின் கேப்டன் பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி 55 பந்துகளில் 58 ரன்கள் எடுத்தார். மற்ற வீரர்கள் அக்‌ஷய ஸ்ரீநிவாசன், மணி பாரதி, பெர்ராரிரோ ஆகியோர் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர்.

பாகிஸ்தானுக்கு எதிராக ஹாட்ரிக் கோல் அடித்த சுனில் சேத்தரி; இந்தியா வெற்றி!

ஜாஃபர் ஜமால் 11 ரன்களில் வெளியேறினார். ராஜ்குமார் கடைசி நேரத்தில் கை கொடுக்க பா11சி திருச்சி அணி 20 ஓவர்களில் 6 விக்கெட் இழப்பிற்கு 117 ரன்கள் எடுத்துள்ளது. இதையடுத்து 118 ரன்களை வெற்றி இலக்காக கொண்ட லைகா கோவை கிங்ஸ் விளையாடியது.

இந்தியா, பாகிஸ்தான் வீரர்களிடையே மோதல்: இந்திய பயிற்சியாளர் வெளியேற்றம்!

இதில் தொடக்க வீரர் எஸ் சுஜய் நிலைத்து நின்று ஆடி 72 ரன்கள் குவித்து கடைசி வரை களத்தில் இருந்தார். ஆதிக் ரஹ்மான் 13 ரன்கள் எடுக்கவே, மற்ற வீரர்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர். இறுதியாக லைகா கோவை கிங்ஸ் அணி 18.2 ஓவர்களில் 4 விக்கெட் இழப்பிற்கு 119 ரன்கள் குவித்து 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

இதன் மூலமாக தொடர்ந்து 3ஆவது போட்டியிலும் பா11சி திருச்சி அணி படுதோல்வி அடைந்துள்ளது. லைகா கோவை கிங்ஸ் 4 போட்டிகளில் விளையாடி 3ல் வெற்றி கண்டுள்ளது.

ரூ.2000 கோடி மதிப்பிலான ட்ரோன் நிறுவனத்தை நடத்தி வரும் தோனியின் பிஸினஸ் பார்ட்னர்!

Follow Us:
Download App:
  • android
  • ios