பிளே ஆப் உறுதி செய்த அணிகள் – ஒருவழியாக உள்ளே நுழைந்த அஸ்வினின் திருப்பூர் தமிழன்ஸ்!
டிஎன்பிஎல் 2024 தொடரின் 8ஆவது சீசனில் லைகா, திருப்பூர், சேப்பாக் சூப்பர் கில்லீஸ் மற்றும் திண்டுக்கல் டிராகன்ஸ் அணிகள் பிளே ஆப் சுற்றுக்கு முன்னேறியுள்ளன.
ஒவ்வொரு ஆண்டும் தமிழ்நாடு பிரீமியர் லீக் கிரிக்கெட் தொடர் நடத்தப்படுகிறது. இதுவரையில் நடத்தப்பட்ட 7 சீசன்களில் சேப்பாக் சூப்பர் கில்லீஸ் 4 முறை டிராபி கைப்பற்றியிருக்கிறது. மதுரை பாந்தர்ஸ் மற்றும் டூட்டி பாட்ரியாட்ஸ் ஆகிய அணிகள் தலா ஒரு முறை டிராபி வென்றுள்ளன. கடந்த ஆண்டு நடைபெற்ற 7ஆவது சீசனில் கோவை கிங்ஸ் டிராபி கைப்பற்றியது.
Paris Olympics 2024 India Schedule – இந்தியா விளையாடும் போட்டிகள் அட்டவணை 2ஆவது நாள்!
இந்த நிலையில் தான் தமிழ்நாடு பிரீமியர் லீக் தொடரின் 8ஆவது சீசன் கடந்த 5ஆம் தேதி பிரம்மாண்டமாக தொடங்குகிறது. இந்த சீசன் கோவை, திருநெல்வேலி, சேலம், திண்டுக்கல் மற்றும் சென்னை ஆகிய இடங்களில் நடத்தப்பட்டு வருகிறது. இந்தப் போட்டியானது வரும் ஆகஸ்ட் 4ஆம் தேதி வரையில் நடைபெறுகிறது. இதில் பிளே ஆப் மற்றும் இறுதிப் போட்டி உள்பட மொத்தமாக 32 போட்டிகள் நடைபெறுகிறது.
இந்த நிலையில் தான் லைகா கோவை கிங்ஸ் அணியானது விளையாடிய 7 போட்டிகளில் 6ல் வெற்றியும், ஒரு போட்டியில் தோல்வி அடைந்து புள்ளிப்பட்டியலில் நம்பர் 1 இடம் பிடித்து பிளே ஆப் சுற்றுக்கு முன்னேறியுள்ளது. இதே போன்று ஐடிரீம் திருப்பூர் தமிழன்ஸ் அணியானது 7 போட்டிகளில் விளையாடி 4ல் வெற்றியும், 3ல் தோல்வியும் அடைந்து புள்ளிப்பட்டியலில் 2ஆவது இடம் பிடித்து பிளே ஆப் சுற்றுக்கு சென்றது.
இதே போன்று சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணியானது விளையாடிய 6 போட்டிகளில் 4 வெற்றியும், 2 தோல்வியும் அடைந்து புள்ளிப்பட்டியலில் 3ஆவது இடம் பிடித்து பிளே ஆப் சுற்றுக்கு சென்றது. கடைசியாக திருப்பூர் தமிழன்ஸ் அணியானது திருச்சியை வீழ்த்தி 4ஆவது அணியாக பிளே ஆப் சுற்றுக்கு சென்றுள்ளது. வரும் 30ஆம் தேதி முதல் பிளே ஆப் சுற்று போட்டிகள் நடைபெற இருக்கிறது.
எஞ்சிய அணிகளான திருச்சி கிராண்ட் சோழாஸ், நெல்லை ராயல் கிங்ஸ், சீகம் மதுரை பாந்தர்ஸ், சேலம் ஸ்பார்ட்ன்ஸ் ஆகிய அணிகள் பிளே ஆப் வாய்ப்பை இழந்து தொடரிலிருந்து வெளியேறியுள்ளன. கடந்த ஆண்டு ஐபிஎல் தொடரில் நெல்லை ராயல் கிங்ஸ், சீகம் மதுரை பாந்தர்ஸ் ஆகிய அணிகள் பிளே ஆப் சுற்றுக்கு சென்றன. இந்த முறை பிளே ஆப் வாய்ப்பை இழந்து வெளியேறிவிட்டன என்பது குறிப்பிடத்தக்கது.