வெற்றியோடு தொடங்கிய லைகா கோவை கிங்ஸ் – ரிட்டர்யர்டு ஹர்ட்டில் வெளியேறிய பிரதோஷ் ரஞ்சன் பால்!
சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணிக்கு எதிரான டிஎன்பிஎல் தொடரின் முதல் போட்டியில் லைகா கோவை கிங்ஸ் 13 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது.
தம்ழிநாடு பிரீமியர் லீக் கிரிக்கெட் தொடரின் 8ஆவது சீசன் இன்று தொடங்கியது. இதில் முதல் போட்டியில் லைகா கோவை கிங்ஸ் மற்றும் சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணிகள் மோதின. இதில் முதலில் டாஸ் வென்ற சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணியின் கேப்டன் பாபா அபாரஜித் பவுலிங் தேர்வு செய்தார். அதன்படி முதலில் விளையாடிய லைகா கோவை கிங்ஸ் அணி 20 ஓவர்களில் 7 விக்கெட்டுகளை இழந்து 141 ரன்கள் குவித்தது.
இதில், அதிகபட்சமாக பாலசுப்பிரமணியம் சச்சின் 63 ரன்கள் எடுத்தார் சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணியைப் பொறுத்த வரையில் அபிஷேக் தன்வர் 4 விக்கெட்டுகள் கைப்பற்றினார். பின்னர் கடின இலக்கை துரத்திய சேப்பாக் சூப்பர் கிங்ஸ் அணியில் சந்தோஷ் குமார் 0 ரன்னில் வெளியேறினார். விக்கெட் கீப்பர் என் ஜெகதீசன் 18 ரன்னில் ஆட்டமிழந்தார். அதன் பிறகு கேப்டன் பாபா அபாரஜித் மற்றும் பிரதோஷ் ரஞ்சன் பால் இருவரும் ஜோடி நிதானமாக விளையாடினர். இதில், ரஞ்சன் பால் ரிட்டயர்டு ஹர்ட் முறையில் ஆட்டமிழந்தார். பாபா அபாரஜித் 38 ரன்களில் ஆட்டமிழக்கவே கடைசியில் வந்த பின்வரிசை வீரர்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர். இறுதியாக சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணியானது 20 ஓவர்களில் 6 விக்கெட்டுகளை இழந்து 128 ரன்கள் மட்டுமே எடுத்து 13 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது.
பவுலிங்கைப் பொறுத்த வரையில் லைகா கோவை கிங்ஸ் அணியில் கௌதம் தாமரை கண்ணன், முகமது, ஜடாவெத் சுப்பிரமணியன், ஷாருக் கான் ஆகியோர் தலா ஒரு விக்கெட் கைப்பற்றினர்.