இங்கிலாந்துக்கு எதிரான முதல் டி20 போட்டியில் கடைசி ஓவரை அபாரமாக வீசி தென்னாப்பிரிக்காவுக்கு த்ரில் வெற்றியை பெற்றுக்கொடுத்து ஆட்டநாயகன் விருதை தட்டி சென்றார் லுங்கி இங்கிடி. கடைசி ஓவரை அவர் வீசிய விதம் அபாரம்.
தென்னாப்பிரிக்கா - இங்கிலாந்து இடையேயான 3 டி20 போட்டிகள் கொண்ட தொடரின் முதல் போட்டி நேற்று நடந்தது. இந்த போட்டியில் தென்னாப்பிரிக்க அணி ஒரு ரன் வித்தியாசத்தில் த்ரில் வெற்றி பெற்று 1-0 என முன்னிலை வகிக்கிறது.
முதலில் பேட்டிங் ஆடிய தென்னாப்பிரிக்க அணி 20 ஓவரில் 177 ரன்கள் அடித்தது. 178 ரன்கள் என்ற இலக்குடன் ஆடிய இங்கிலாந்து அணியின் தொடக்க வீரர் ஜேசன் ராய் அடித்து வெளுத்துவிட்டார். வெறும் 38 பந்தில் 70 ரன்களை குவித்தார் ராய். அவரது அதிரடியால் அந்த அணி ஒரு கட்டத்தில் வெற்றிக்கு அருகில் இருந்தது.
ராய் அவுட்டாகும்போது இங்கிலாந்து அணியின் ஸ்கோர் 14.2 ஓவரில் 132 ரன்கள். எனவே எஞ்சிய 34 பந்துகளில் இங்கிலாந்தின் வெற்றிக்கு வெறும் 46 ரன்கள் மட்டுமே தேவை. எனவே எளிதாக வென்றிருக்க வேண்டிய இந்த போட்டியை இங்கிலாந்து வீரர்களின் சொதப்பலான பேட்டிங்கால் அந்த அணி தவறவிட்டது. 15வது ஓவரின் இரண்டாவது பந்தில் ராய் அவுட்டாக, அதற்கடுத்த ஓவரில் டென்லி, 18வது ஓவரில் ஸ்டொக்ஸ், 19வது ஓவரில் கேப்டன் மோர்கன் என ஒரு ஓவருக்கு ஒரு வீரர் ஆட்டமிழந்தார்.
கடைசி 2 ஓவரில் 23 ரன்கள் தேவைப்பட்ட நிலையில், 19வது ஓவரில் 2 பவுண்டரிகள் மற்றும் ஒரு சிக்ஸர் அடித்த கேப்டன் மோர்கன், அந்த ஓவரின் கடைசி பந்தில் ஆட்டமிழந்தார். கடைசி ஓவரில் இங்கிலாந்தின் வெற்றிக்கு 7 ரன்கள் தேவை. பரபரப்பான கட்டத்தில், அந்த கடைசி ஓவரை லுங்கி இங்கிடி வீசினார். கடைசி ஓவரை அபாரமாக வீசி வெறும் 5 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்து 2 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார்.
Also Read - இரட்டை சதத்தை தவறவிட்ட தமிழக வீரர்.. சவுராஷ்டிராவுக்கு சவுக்கடி கொடுத்த தமிழ்நாடு
கடைசி ஓவரின் முதல் பந்தில் 2 ரன்கள் அடித்த டாம் கரன், இரண்டாவது பந்தில் ஆட்டமிழந்தார். மூன்றாவது பந்தில் ரன்னே அடிக்காத மொயின் அலி, நான்காவது பந்தில் 2 ரன்கள் அடித்து, ஐந்தாவது பந்தில் ஆட்டமிழந்தார். இதையடுத்து கடைசி பந்தில் 3 ரன்கள் தேவைப்பட்ட நிலையில், அந்த பந்தை அடித்துவிட்டு, ஒரு ரன்னை ஓடி முடித்து, போட்டியை டையாவது செய்துவிட வேண்டும் என்று இரண்டாவது ரன் ஓடிய அடில் ரஷீத் ரன் அவுட்டானார். அந்த ஓவரில் 5 ரன்கள் மட்டுமே இங்கிலாந்து அணி அடித்ததையடுத்து ஒரு ரன் வித்தியாசத்தில் த்ரில் வெற்றி பெற்றது தென்னாப்பிரிக்க அணி.
லுங்கி இங்கிடி, ஆட்டத்தின் பரபரப்பான சூழலில், நெருக்கடியான நிலையில், அந்த கடைசி ஓவரை அபாரமாக வீசினார். அந்த வீடியோ இதோ..
#SAvENG
— Muhammad Irfan khan (@Muhamma81056128) February 12, 2020
South Africa Vs England.
What a trilling match 😍😍 pic.twitter.com/T7JvPfWihc
Read Exclusive COVID-19 Coronavirus News updates, at Asianet News Tamil.
மெய்நிகர் போட் ரேசிங் கேம் ஆடுங்கள் மற்றும் சவாலுக்கு உட்படுத்தி கொள்ளுங்கள். கிளிக் செய்து விளையாடுங்கள்
Last Updated Feb 13, 2020, 5:19 PM IST