தொடர்ந்து 2ஆவது முறையாக எலிமினேட்டரில் வெளியேறிய லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ்!
மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிரான நேற்று நடந்த போட்டியில் 81 ரன்களில் தோல்வி அடைந்து தொடர்ந்து 2ஆவது முறையாக எலிமினேட்டரில் லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் வெளியேறியுள்ளது.
மும்பை இந்தியன்ஸ் மற்றும் லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணிகளுக்கு இடையிலான எலிமினேட்டர் போட்டி சேப்பாக்கம் மைதானத்தில் நடந்து வருகிறது. இதில், டாஸ் வென்ற மும்பை இந்தியன்ஸ் முதலில் பேட்டிங் ஆடியது. அதன்படி மும்பை அணி 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட் இழப்பிற்கு 182 ரன்கள் குவித்தது. இதில் ஒருவர் கூட அரைசதம் அடிக்கவில்லை. அப்படி ஒரு வீரர் கூட அரைசதம் அடிக்காமல் பிளே ஆஃப் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணி அதிகபட்சமாக 182 ரன்கள் குவித்து அதிக ரன்கள் எடுத்த அணியில் முதலிடம் பிடித்துள்ளது.
13 ஆண்டுகளுக்கு பிறகு ஐபிஎல் பிளே ஆஃபில் 3 முறை ரன் அவுட் செய்த மும்பை; இதுல 2 ரோகித் சர்மா!
பின்னர் கடின இலக்கை துரத்திய லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணிக்கு மார்கஸ் ஸ்டோய்னிஸ் மட்டுமே நிதானமாக ஆடி 40 ரன்கள் சேர்த்துக் கொடுத்தார். மற்ற வீரர்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர். இதில் வேடிக்கை என்னவென்றால், 3 வீரர்கள் ரன் அவுட் முறையில் ஆட்டமிழந்துள்ளனர். அதுமட்டுமில்லாமல் மும்பை இந்தியன்ஸ் வீரர் ஆகாஷ் மத்வால் 5 விக்கெட்டுகள் கைப்பற்றி புதிய சாதனை படைத்துள்ளார்.
24 ஆண்டுகளுக்குப் பிறகு அனில் கும்ப்ளே சாதனையை சமன் செய்து புதிய சாதனை படைத்த ஆகாஷ் மத்வால்!
இதுவரையில் இந்த சீசனில் 3.3 ஓவர்களில் 5 ரன்கள் விட்டுக் கொடுத்து 5 விக்கெட்டுகள் கைப்பற்றி புதிய சாதனையை நிகழ்த்தியுள்ளார். இறுதியாக மும்பை இந்தியன்ஸ் அணி 16.3 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 101 ரன்கள் மட்டுமே எடுத்து 81 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது. இதன் மூலமாக தொடர்ந்து 2 ஆவது முறையாக எலிமினேட்டர் சுற்றில் தோல்வி அடைந்து வெளியேறியுள்ளது. இதற்கு முன்னதாக கடந்த சீசனில் ஆர்சிபியிடம் தோல்வி அடைந்து வெளியேறியது என்பது குறிப்பிடத்தக்கது.
முட்டி மோதியதால் ரன் அவுட்டாகி பரிதாபமாக சென்ற மார்கஸ் ஸ்டோய்னிஸ்!
இதுவரையில் இரு அணிகளுக்கும் இடையில் நடந்த 3 போட்டிகளிலும் லக்னோவே வெற்றி பெற்றிருந்தது. இந்த நிலையில், தற்போது 4ஆவது போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணி வெற்றி பெற்று வரலாற்று சாதனை படைத்துள்ளார். இந்தப் போட்டியில் வெற்றி பெற்ற மும்பை இந்தியன்ஸ் அண் இவரும் 26ஆம் தேதி அகமதாபாத் மைதானத்தில் குவாலிஃபையர் 2 சுற்றில் குஜராத் டைட்டன்ஸ் அணியை எதிர்கொள்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.