ஐபிஎல் 15வது சீசனில் லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் மற்றும் சிஎஸ்கே அணிகளின் உத்தேச ஆடும் லெவனை பார்ப்போம்.
ஐபிஎல் 15வது சீசன் விறுவிறுப்பாக நடந்துவருகிறது. மும்பை வான்கடே மைதானத்தில் இன்று நடக்கும் போட்டியில் லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் மற்றும் சிஎஸ்கே அணிகள் மோதுகின்றன.
சிஎஸ்கே மற்றும் லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் ஆகிய 2 அணிகளுமே முதல் போட்டியில் தோல்வியை தழுவிய நிலையில், முதல் வெற்றியை பெறும் முனைப்பில் இன்று களமிறங்குகின்றன. எனவே இரு அணிகளுமே வெற்றிக்காக கடுமையாக போராடும் என்பதால் போட்டி மிகக்கடுமையாக இருக்கும்.
கடந்த போட்டியில் சிஎஸ்கே அணியில் ஆடிராத ஆல்ரவுண்டர் மொயின் அலி இன்றைய போட்டியில் ஆடுவார். மொயின் அலி ஆடுவதால் டெவான் கான்வே நீக்கப்படுவார். இந்த ஒரு மாற்றம் மட்டும் சிஎஸ்கே அணியில் செய்யப்படும். அதனால் ருதுராஜுடன் ராபின் உத்தப்பா தொடக்க வீரராக ஆடுவார். மொயின் அலி 3ம் வரிசையில் ஆடுவார்.
உத்தேச சிஎஸ்கே அணி:
ருதுராஜ் கெய்க்வாட், ராபின் உத்தப்பா, மொயின் அலி, அம்பாதி ராயுடு, ரவீந்திர ஜடேஜா (கேப்டன்), ஷிவம் துபே, தோனி (விக்கெட் கீப்பர்), ட்வைன் பிராவோ, மிட்செல் சாண்ட்னெர், ஆடம் மில்னே, துஷார் தேஷ்பாண்டே.
லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணியில் எந்த மாற்றமும் செய்யப்படுவதற்கான வாய்ப்பில்லை. குஜராத் டைட்டன்ஸுக்கு எதிராக ஆடிய அதே ஆடும் லெவன் காம்பினேஷனுடன் தான் லக்னோ அணி களமிறங்கும்.
உத்தேச லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணி:
கேஎல் ராகுல் (கேப்டன்), குயிண்டன் டி காக் (விக்கெட் கீப்பர்), எவின் லூயிஸ், மனீஷ் பாண்டே, தீபக் ஹூடா, க்ருணல் பாண்டியா, மோஹ்சின் கான், ஆயுஷ் பதோனி, துஷ்மந்தா சமீரா, ரவி பிஷ்னோய், ஆவேஷ் கான்.
