லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் டாஸ் வென்ற ராஜஸ்தான் ராயல்ஸ் கேப்டன் சஞ்சு சாம்சன் ஃபீல்டிங்கை தேர்வு செய்துள்ளார். 

ஐபிஎல் 15வது சீசனின் இன்று இரவு 7.30 தொடங்கிய போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணிகள் மோதுகின்றன. இரு அணிகளுமே இந்த சீசனில் நன்றாக விளையாடிவரும் நிலையில், மும்பை வான்கடேவில் நடக்கும் போட்டியில் டாஸ் வென்ற ராஜஸ்தான் ராயல்ஸ் கேப்டன் சஞ்சு சாம்சன் ஃபீல்டிங்கை தேர்வு செய்துள்ளார்.

இந்த போட்டிக்கான ராஜஸ்தான் ராயல்ஸ் அணியில் 2 மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. இளம் தொடக்க வீரர் யஷஸ்வி ஜெய்ஸ்வால் 3 போட்டிகளிலும் சொதப்பியதால் அவர் நீக்கப்பட்டு, அவருக்கு பதிலாக ராசி வாண்டெர் டசன் சேர்க்கப்பட்டுள்ளார். இதற்கு முந்தைய போட்டிகளில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 3 வெளிநாட்டு வீரர்களுடன் மட்டுமே ஆடியதால் இந்த போட்டியில் ஜெய்ஸ்வாலுக்கு பதிலாக 4வது வெளிநாட்டு வீரராக வாண்டெர் டசன் சேர்க்கப்பட்டுள்ளார்.

மேலும் ஃபாஸ்ட் பவுலர் நவ்தீப் சைனிக்கு பதிலாக குல்தீப் சென் சேர்க்கப்பட்டுள்ளார். 

ராஜஸ்தான் ராயல்ஸ் அணி:

ஜோஸ் பட்லர், வாண்டர் டசன், தேவ்தத் படிக்கல், சஞ்சு சாம்சன் (கேப்டன், விக்கெட் கீப்பர்), ஷிம்ரான் ஹெட்மயர், ரியான் பராக், ரவிச்சந்திரன் அஷ்வின், குல்தீப் சென், டிரெண்ட் போல்ட், பிரசித் கிருஷ்ணா, யுஸ்வேந்திர சாஹல்.

லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணியில் 2 மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. மார்கஸ் ஸ்டோய்னிஸ் இந்த போட்டியில் ஆடுவதால் எவின் லீவிஸ் நீக்கப்பட்டுள்ளார். ஆண்ட்ரூ டைக்கு பதிலாக துஷ்மந்தா சமீரா ஆடுகிறார்.

லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணி:

கேஎல் ராகுல் (கேப்டன்), குயிண்டன் டி காக் (விக்கெட் கீப்பர்), மார்கஸ் ஸ்டோய்னிஸ், தீபக் ஹூடா, ஆயுஷ் பதோனி, க்ருணல் பாண்டியா, ஜேசன் ஹோல்டர், கிருஷ்ணப்பா கௌதம், துஷ்மந்தா சமீரா, ரவி பிஷ்னோய், ஆவேஷ் கான்.