SA20: குசால் மெண்டிஸ் காட்டடி அரைசதம்.. வாழ்வா சாவா போட்டியில் 20 ஓவரில் 226 ரன்களை குவித்தது பார்ல் ராயல்ஸ்
தென்னாப்பிரிக்கா டி20 லீக்கில் கடைசி லீக் போட்டியில் பிரிட்டோரியா கேபிடள்ஸுக்கு எதிராக முதலில் பேட்டிங் ஆடிய பார்ல் ராயல்ஸ் அணி, 20 ஓவரில் 226 ரன்களை குவித்து 227 ரன்கள் என்ற கடின இலக்கை பிரிட்டோரியா கேபிடள்ஸுக்கு நிர்ணயித்துள்ளது.
தென்னாப்பிரிக்கா டி20 லீக் தொடர் இறுதிக்கட்டத்தை நெருங்குகிறது. பிரிட்டோரியா கேபிடள்ஸ், ஜோபர்க் சூப்பர் கிங்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஈஸ்டர்ன் கேப் ஆகிய 3 அணிகளும் அரையிறுதிக்கு முன்னேறிவிட்டன.
கடைசி அணி எதுவென்பதை தீர்மானிக்கும் கடைசி லீக் போட்டி நடந்துவருகிறது. பார்ல் ராயல்ஸ் - பிரிட்டோரியா கேபிடள்ஸ் அணிகளுக்கு இடையேயான கடைசி லீக் போட்டியில் டாஸ் வென்ற பார்ல் ராயல்ஸ் அணி ஃபீல்டிங்கை தேர்வு செய்தது.
IND vs AUS: முதல் டெஸ்ட் போட்டிக்கான ஆடும் லெவன்..! சஞ்சய் மஞ்சரேக்கரின் அதிரடி தேர்வு
பார்ல் ராயல்ஸ் அணி:
ஜேசன் ராய், பால் ஸ்டர்லிங், ஜோஸ் பட்லர் (விக்கெட் கீப்பர்), மிட்செல் வான் பூரென், டேவிட் மில்லர் (கேப்டன்), இயன் மோர்கன், இவான் ஜோன்ஸ், ஆண்டில் ஃபெலுக்வாயோ, ஃபார்ச்சூன், கோடி யூசுஃப், லுங்கி இங்கிடி.
பிரிட்டோரியா கேபிடள்ஸ் அணி:
ஃபிலிப் சால்ட் (விக்கெட் கீப்பர்), குசால் மெண்டிஸ், தியூனிஸ் டி பிருய்ன் (கேப்டன்), ரைலீ ரூசோ, காலின் இங்ராம், ஜேம்ஸ் நீஷம், சேனுரான் முத்துசாமி, மைகேல் பிரிட்டோரியஸ், ஈதன் போஷ், அடில் ரஷீத், அன்ரிக் நோர்க்யா.
முதலில் பேட்டிங் ஆடிய பார்ல் ராயல்ஸ் அணி வெற்றி கட்டாயத்தில் களமிறங்கிய நிலையில், வெற்றியை மனதில் வைத்து அபாரமாக பேட்டிங் ஆடியது. தொடக்க வீரர்கள் குசால் மெண்டிஸ் மற்றும் ஃபிலிப் சால்ட் இணைந்து முதல் விக்கெட்டுக்கு 5.2 ஓவரில் 69 ரன்களை சேர்த்தனர். ஃபிலிப் சால்ட் 21 பந்தில் 39 ரன்கள் விளாசினார். அதிரடியாக ஆடி அரைசதம் அடித்த குசால் மெண்டிஸ், காட்டடி அடித்து 41 பந்தில் 8 பவுண்டரிகள் மற்றும் 4 சிக்ஸர்களுடன் 80 ரன்களை குவித்தார்.
காலின் இங்ராம் அதிரடியாக ஆடி 21 பந்தில் 4 பவுண்டரிகள் மற்றும் 2 சிக்ஸர்களுடன் 41 ரன்களும், ஜிம்மி நீஷம் 11 பந்தில் 22 ரன்களும் அடிக்க, 20 ஓவரில் 226 ரன்களை குவித்த பார்ல் ராயல்ஸ் அணி, 227 ரன்கள் என்ற கடின இலக்கை பிரிட்டோரியா கேபிடள்ஸுக்கு நிர்ணயித்துள்ளது. பிரிட்டோரியா கேபிடள்ஸ் ஏற்கனவே அரையிறுதிக்கு முன்னேறிவிட்டது குறிப்பிடத்தக்கது.