உள்நாட்டு போட்டிகளில் நீண்டகாலமாக சிறப்பாக ஆடிவரும் விக்கெட் கீப்பர் - பேட்ஸ்மேன் கேஎஸ் பரத்துக்கு இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடருக்கான இந்திய அணியில் இடம் கிடைத்துள்ளது.
ஜூன் 18-22ல் இங்கிலாந்தில் நடக்கும் ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் ஃபைனலில் நியூசிலாந்தை எதிர்கொண்டு ஆடும் இந்திய அணி, இங்கிலாந்திலேயே தங்கியிருந்து அந்த அணிக்கு எதிராக 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரிலும் ஆடுகிறது.
அந்த தொடருக்கான 20 வீரர்களை கொண்ட இந்திய அணி அறிவிக்கப்பட்டுவிட்டது.
இந்திய அணி:
விராட் கோலி(கேப்டன்), ரஹானே(துணை கேப்டன்), ரோஹித் சர்மா, ஷுப்மன் கில், மயன்க் அகர்வால், புஜாரா, ஹனுமா விஹாரி, ரிஷப் பண்ட்(விக்கெட் கீப்பர்), அஷ்வின், ஜடேஜா, அக்ஸர் படேல், வாஷிங்டன் சுந்தர், பும்ரா, இஷாந்த் சர்மா, ஷமி, சிராஜ், ஷர்துல் தாகூர், உமேஷ் யாதவ்.
கேஎல் ராகுல், ரிதிமான் சஹா.(உடற்தகுதி கண்காணிக்கப்படுகிறது)
ஸ்டாண்ட்பை வீரர்கள் - அபிமன்யூ ஈஸ்வரன், ஆவேஷ் கான், பிரசித் கிருஷ்ணா, அர்ஸான் நாக்வஸ்வாலா
ரிஷப் பண்ட் முதன்மை விக்கெட் கீப்பராக எடுக்கப்பட்ட நிலையில், கொரோனாவால் பாதிக்கப்பட்ட சீனியர் விக்கெட் கீப்பர் ரிதிமான் சஹா பேக்கப் விக்கெட் கீப்பராக எடுக்கப்பட்டு, அவரது உடல்நிலை பரிசோதிக்கப்பட்டுவருகிறது.
குவாரண்டின் எல்லாம் முடித்து ஜூன் 2ம் தேதி இங்கிலாந்துக்கு இந்திய அணி புறப்படவுள்ள நிலையில், ஒருவேளை அதற்குள்ளாக சஹா ஃபிட்னெஸ் பெறவில்லை என்றால், ரிஷப் பண்ட் ஒரேயொரு விக்கெட் கீப்பருடன் செல்ல நேரிடும். அதனால் முன்னெச்சரிக்கையாக ஆந்திராவை சேர்ந்த சிறந்த விக்கெட் கீப்பரான கேஎஸ் பரத் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார்.
ஆந்திராவை சேர்ந்த கேஎஸ் பரத் உள்நாட்டு போட்டிகளில் நீண்டகாலமாக சிறப்பாக ஆடிவருகிறார். அவரை எப்போதோ இந்திய டெஸ்ட் அணியில் எடுத்திருக்க வேண்டும். ஏனெனில் மிகச்சிறந்த விக்கெட் கீப்பர் அவர். ஆனால் சஹா அணியில் இருக்கும்போதே ரிஷப் பண்ட் விக்கெட் கீப்பர் இடத்தை பிடித்துவிட்டதால், பரத்துக்கு வாய்ப்பு கிடைக்கவில்லை. இந்நிலையில், இப்போது ஒரு வாய்ப்பு கிடைத்துள்ளது.
