ஆஸ்திரேலிய அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் ஆடிவருகிறது. இதில் மும்பை வான்கடேவில் நடந்த முதல் ஒருநாள் போட்டியில் இந்திய அணி படுதோல்வியடைந்தது. அந்த போட்டியில் இந்திய அணி நிர்ணயித்த 256 ரன்கள் என்ற இலக்கை, ஆஸ்திரேலிய அணியின் தொடக்க வீரர்கள் வார்னரும் ஃபின்ச்சும் இணைந்தே அடித்துவிட்டனர். விக்கெட் இழப்பின்றி இலக்கை எட்டிய ஆஸ்திரேலிய அணி, 10 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. 

Also Read - விராட் கோலியின் வீக்னெஸை கண்டுபிடித்த ஆடம் ஸாம்பா

ஆஸ்திரேலிய அணி 1-0 என முன்னிலை வகிக்கும் நிலையில், தொடரை வெல்லும் வாய்ப்பை தக்கவைக்க, இன்று நடக்கும் இரண்டாவது போட்டியில் கண்டிப்பாக வெற்றி பெற்றே தீர வேண்டிய கட்டாயத்தில் இந்திய அணி உள்ளது. முதல் போட்டியில் பேட்டிங்கின் போது, தலையில் அடிபட்ட ரிஷப் பண்ட், அந்த போட்டியில் விக்கெட் கீப்பிங் செய்யவில்லை. இன்று நடக்கவுள்ள இரண்டாவது போட்டியிலும் அவர் ஆடவில்லை. 

Also Read - போக்குக்காட்டிய தோனிக்கு ஆப்பு அடித்த பிசிசிஐ.. தோனியின் கெரியர் ஓவர்

ராஜ்கோட்டில் இன்று நடக்கவுள்ள இரண்டாவது ஒருநாள் போட்டியிலும் கேஎல் ராகுலே விக்கெட் கீப்பிங் செய்வார். எனினும் ரிஷப் பண்ட்டுக்கு பதிலாக மாற்று விக்கெட் கீப்பராக ஆந்திராவை சேர்ந்த சிறந்த விக்கெட் கீப்பர் - பேட்ஸ்மேனான கேஎஸ் பரத் அணியில் இணைய அழைக்கப்பட்டுள்ளார். 

கேஎஸ் பரத் முதல் தர போட்டிகளில் மிகச்சிறப்பாக விக்கெட் கீப்பிங் செய்து அனைவரையும் கவர்ந்துள்ளார். டெஸ்ட் கிரிக்கெட்டிலேயே ரிதிமான் சஹாவிற்கு மாற்று விக்கெட் கீப்பராக கேஎஸ் பரத்தை சேர்க்க வேண்டும் என்ற குரல்கள் ஏற்கனவே எழுந்தன. இந்நிலையில், ஒருநாள் அணியில் இணைய கேஎஸ் பரத்துக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. 

Also Read - அதெல்லாம் சரியா வராது.. 2வது ஒருநாள் போட்டிக்கான இந்திய அணியில் அதிரடி மாற்றங்கள்

சஞ்சு சாம்சன், இஷான் கிஷான் ஆகியோர் நியூசிலாந்தில் நடைபெறும் தொடரில் இந்தியா ஏ அணிக்காக ஆடிவருகின்றனர். எனவே கேஎஸ் பரத் ஒருநாள் அணியில் இணைய அழைக்கப்பட்டுள்ளார். அணியில் அவர் இருந்தாலும் ஆடும் லெவனில் இடம்பெற வாய்ப்பில்லை.ம் ஏனெனில் ராகுலே விக்கெட் கீப்பிங் செய்வார் என்பதால், பரத்துக்கு அணியில் இடம் கிடைக்காது.