கொல்கத்தாவில் ரசிகர்களுக்கு சிக்ஸர் விருந்து கொடுத்த ராக்ஸ்டார் ரட்சகன் ரஸல் – கேகேஆர் 208 ரன்கள் குவிப்பு!
சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு எதிரான ஐபிஎல் தொடரின் 3ஆவது போட்டியில் முதலில் பேட்டிங் செய்த கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி 20 ஓவர்களில் 6 விக்கெட்டுகளை இழந்து 207 ரன்கள் எடுத்துள்ளது.
கொல்கத்தாவின் கோட்டையான ஈடன் கார்டன் மைதானத்தில் ஐபிஎல் 2024 தொடரின் 3ஆவது போட்டி நடைபெற்று வருகிறது. இதில், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகள் விளையாடி வருகின்றன. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் கேப்டன் பேட் கம்மின்ஸ் முதலில் பந்து வீசுவதாக அறிவித்தார். அதன்படி பிலிப் சால்ட் மற்றும் சுனில் நரைன் இருவரும் தொடக்க வீரர்களாக களமிறங்கினர்.
இதில், நரைன் 2 ரன்களில் ரன் அவுட் முறையில் ஆட்டமிழந்தார். அடுத்து வந்த வெங்கடேஷ் ஐயர் 4 ரன்களில் நடராஜன் பந்தில் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். இதே போன்று அதே ஓவரில் கேப்டன் ஷ்ரேயாஸ் ஐயரும் கேட்ச் கொடுத்து நடையை கட்டினார். அதன் பின் வந்த நிதிஷ் ராணா 9 ரன்களில் ஆட்டமிழந்தார்.
இதையடுத்து பிலிப் சால்ட் மற்றும் ராமன்தீப் சிங் இருவரும் இணைந்து அதிரடியாக விளையாடினர். இதில் பிலிப் சால்ட் 40 பந்துகளில் 3 பவுண்டரி, 3 சிக்ஸர் உள்பட 54 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். இதே போன்று ராமன்தீப் சிங்கும் 17 பந்துகளில் 4 சிக்ஸர், ஒரு பவுண்டரி உள்பட 35 ரன்கள் சேர்த்து கொடுத்து ஆட்டமிழந்தார்.
கடைசியாக ரிங்கு சிங் மற்றும் ஆண்ட்ரே ரஸல் இருவரும் இணைந்தனர். இதில் ஸ்டிரைக்கை தானே தக்க வைத்துக் கொண்டு விளையாடிய ஆண்ட்ரே ரஸல் சன்ரைசர்ஸ் பவுலர்களை திணற வைத்து ரசிகர்களுக்கு விருந்து கொடுத்தார். வரிசையாக சிகஸரும், பவுண்டரியுமாக விளாசித் தள்ளினார். ஒரு கட்டத்தில் 13.5 ஓவர்களில் 6 விக்கெட்டுகளை இழந்து 119 ரன்கள் எடுத்திருந்த கொல்கத்தா அதன் பிறகு கிட்டத்தட்ட 6 ஓவர்களில் 88 ரன்கள் எடுத்துள்ளது.
இந்தப் போட்டியில் ஆண்ட்ரே ரஸல் 20 பந்துகளில் அரைசதம் அடித்து அதனை பாலிவுட் ஸ்டார் ஷாருக்கானுக்கு அர்ப்பணித்துள்ளார். இந்த 20 பந்துகளுக்குள், 6 சிக்ஸர்கள் விளாசியுள்ளார். தொடர்ந்து விளையாடிய ரஸல் 25 பந்துகளில் 64 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்துள்ளார். இதில், 3 பவுண்டரி, 7 சிக்ஸர்கள் அடங்கும். மேலும் ரிங்கு சிங் 23 ரன்களில் கடைசி ஓவரில் ஆட்டமிழந்துள்ளார். இறுதியாக கொல்கத்தா நைட் ரைடர்ஸ் 20 ஓவர்களில் 7 விக்கெட்டுகளை இழந்து 208 ரன்கள் எடுத்துள்ளது.
பவுலிங்கைப் பொறுத்த வரையில் நடராஜன் 3 விக்கெட்டுகள் கைப்பற்றினார். மாயங்க மார்க்கண்டே 2 விக்கெட்டுகள் கைப்பற்றினார். பேட் கம்மின்ஸ் ஒரு விக்கெட் எடுத்தார்.
- 23 March 2024
- Andre Russell
- Asianet News Tamil
- Eden Gardens
- Gautam Gambhir
- IPL 2024 asianet news
- IPL 2024 schedule
- IPL Third match
- IPL cricket 2024 live updates
- IPL point table 2024
- Indian Premier League
- KKR vs SRH ipl 2024
- KKR vs SRH live
- KKR vs SRH live score
- Kolkata
- Kolkata Knight Riders
- Kolkata Knight Riders vs Sunrisers Hyderabad
- Mitchell Starc
- Pat Cummins
- Shreyas Iyer
- Sunrisers Hyderabad
- T Natarajan
- TATA IPL 2024 news
- watch KKR vs SRH live