நடுவருடன் வாக்கு வாதம் செய்த நிதிஷ் ராணா: ரூ.25 லட்சம் அபராதம்!

குறிப்பிட்ட நேரத்தையும் தாண்டி பந்து வீச அதிக நேரம் எடுத்துக் கொண்டதால் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் கேப்டன் நிதிஷ் ராணாவுக்கு போட்டி சம்பளத்தில் ரூ.25 லட்சம் அபராதமாக விதிக்கப்பட்டது.

KKR Skipper Nitish Rana who argued with umpires and fined rs. 25 lakhs for slow over rate

சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகளுக்கு இடையிலான 61ஆவது போட்டி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நேற்று நடந்தது. சென்னையில் நடக்கும் போட்டி என்பதால், இந்தப் போட்டியில் சிஎஸ்கே வெற்றி பெற்று முதல் அணியாக பிளே ஆஃப் சுற்றுக்கு செல்லும் என்று எதிர்பார்க்கப்பட்டது.

டாஸ் ஜெயிச்சு பேட்டிங் எடுத்தது தான் தவறு: தோல்விக்கு முழு பொற்றுப்பேற்ற தோனி!

நேற்று நடந்த போட்டியில் டாஸ் வென்ற சென்னை சூப்பர் கிங்ஸ் அணி முதலில் பேட்டிங் ஆடியது. சிஎஸ்கே அணியில் யாராலயும் அதிரடியாக ஆடி ரன்கள் குவிக்க முடியவில்லை. ருத்துராஜ் கெய்க்வாட் 17, ரஹானே 16, கான்வே 30, ராயுடு 4, மொயீன் அலி 1, ஜடேஜா 20 என்று குறைவான ரன்களே எடுத்தனர். இதில் ஷிவம் துபே மட்டும் நிலைத்து நின்று 48 ரன்கள் சேர்த்தார். இறுதியாக சென்னை சூப்பர் கிங்ஸ் 20 ஓவர்களில் 6 விக்கெட் இழப்பிற்கு 144 ரன்கள் மட்டுமே எடுத்தது.

சுனில் கவாஸ்கர் சட்டையில் ஆட்டோகிராஃப் போட்ட தோனி!

இந்தப் போட்டியின் போது கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் கேப்டன் நிதிஷ் ராணா நடுவர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். போட்டியின் போது கடைசி ஓவரை கொல்கத்தா அணியின் வேகப்பந்து வீச்சாளர் வைபவ் அரோரா வீச வந்தார். ஆனால், குறிப்பிட்ட நேரத்திற்குள்ளாக பந்து வீசாமல் ஸ்லோ ஓவர் ரேட் காரணமாக ஒரு பீல்டரை வெளியில் நிறுத்துவதற்குப் பதிலாக உள்ளே நிறுத்த வேண்டும் என்று நடுவர்கள் தெரிவித்தனர்.

ஐபிஎல் புதிய விதிகளின் படி குறிப்பிட்ட நேரத்தை தாண்டி சென்றதால் 5 பீல்டர்களுக்கு பதிலாக அதிகபட்சமாக 4 பீல்டர்களை வட்டத்திற்கு வெளியில் வைத்திருக்க வேண்டும் என்று நடுவர்கள் கூறியதைத் தொடர்ந்து அவர்களுடன் கேகேஆர் கேப்டன் நிதிஷ் ராணா வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார்.

சென்னையில் நடந்த கடைசி லீக்; தோற்றாலும் கம்பீரம் குறையாமல் ரசிகர்களை அன்பில் ஆழ்த்திய தோனி அண்ட் டீம்!

இதையடுத்து பேட்டிங் ஆடிய கொல்கத்தா அணியின் நிதிஷ் ராணா மற்றும் ரிங்கு சிங் ஆகியோர் சிறப்பான பேட்டிங்கை வெளிப்படுத்தி அணியை வெற்றிப்பாதைக்கு அழைத்துச் சென்றனர். இறுதியாக கேகேஆர் 18.3 ஓவர்களில் 4 விக்கெட் இழந்து 147 ரன்கள் எடுத்து 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த வெற்றியின் மூலமாக பிளே ஆஃப் வாய்ப்பையும் தக்க வைத்துக் கொண்டது.

இந்த நிலையில், ஸ்லோ ஓவர் ரேட் காரணமாக கேகேஆர் கேப்டன் நிதிஷ் ராணாவுக்கு ரூ.25 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டது. மேலும், கேகேஆர் அணியில் இடம் பெற்ற இம்பேக்ட் பிளேயர் உள்பட 11 வீரர்களுக்கும் ரூ.6 லட்சம் அல்லது  போட்டி சம்பளத்திலிருந்து 25 சதவிகிதம் எத் குறைவோ அதனை அபராதமாக கட்ட வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

 

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios