டாஸ் ஜெயிச்சு பேட்டிங் எடுத்தது தான் தவறு: தோல்விக்கு முழு பொற்றுப்பேற்ற தோனி!

கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் தோல்வி அடைந்த நிலையில் தோல்விக்கான காரணம் குறித்து தோனி வெளிப்படையாக பேசியுள்ளார்.

CSK Skipper MS Dhoni Gives Explanation about loss against KKR in 61st IPL Match at MA Chidambaram Stadium

சென்னையின் கோட்டை என்று சொல்லக் கூடிய சேப்பாக்கம் மைதானத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகளுக்கு இடையிலான ஐபிஎல் தொடரின் 61ஆவது போட்டி நடந்தது. சென்னையில் நடந்த கடைசி லீக் போட்டி என்பதால், சிஎஸ்கேயின் வெற்றிக்காக ரசிகர்கள் ஆவலுடன் காத்திருந்தனர். டாஸ் வென்று முதலில் ஆடிய சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 20 ஓவர்களில் 6 விக்கெட் இழப்பிற்கு 144 ரன்கள் மட்டுமே எடுத்தது.

சுனில் கவாஸ்கர் சட்டையில் ஆட்டோகிராஃப் போட்ட தோனி!

பின்னர், எளிய இலக்கை துரத்திய கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியில் ரிங்கு சிங் மற்றும் கேப்டன் நிதிஷ் ராணா இருவரும் நிதானமாக ஆடி அரைசதம் அடித்து அணியை வெற்றிப்பாதைக்கு அழைத்துச் சென்றனர். இறுதியாக கொல்கத்தா அணி 18.3 ஓவர்களில் 4 விக்கெட் இழப்பிற்கு 147 ரன்கள் எடுத்து 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

சென்னையில் நடந்த கடைசி லீக்; தோற்றாலும் கம்பீரம் குறையாமல் ரசிகர்களை அன்பில் ஆழ்த்திய தோனி அண்ட் டீம்!

இந்தப் போட்டியில் சென்னை தோல்வி அடைந்த நிலையில், வரும் 20 ஆம் தேதி டெல்லியில் நடக்கும் போட்டியில் வெற்றி பெற்றால் மட்டுமே பிளே ஆஃப் சுற்றுக்கு செல்ல முடியும் என்ற நிலை ஏற்பட்டுள்ளது. பஞ்சாப் கிங்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு ஆகிய அணிகள் அடுத்து நடக்கவுள்ள 2 போட்டிகளிலும் வெற்றி பெற்றால் சென்னையின் பிளே ஆஃப் வெறும் கனவாக மாறிவிடும்.

CSKஐவிட RCBக்காக முதல் வீரராக 600 ரன்கள் குவித்த ஃபாப் டூப்ளெசிஸ்!

கொல்கத்தாவுக்கு எதிரான போட்டியில் அடைந்த தோல்வி குறித்து தோனி கூறியிருப்பதாவது: 2ஆவது இன்னிங்ஸின் முதல் பந்தே நாம் தவறான முடிவை எடுத்துவிட்டதாக உணர வைத்ததாக கூறினார். டாஸ் போடும் போதே பேட்டிங் என்று தவறான முடிவு எடுத்துவிட்டேன். பனிப்பொழிவு இருக்குமோ இருக்காதோ என்ற சந்தேகம் தான் எங்களுக்கு இருந்தது.

ஆனால், இந்தப் பிட்சில் 180 ரன்கள் எடுத்தால் மட்டுமே வெற்றி பெற முடியும் என்று முதல் பந்திலேயே தெரிந்து விட்டது. பந்து வீச்சாளர்கள் மீது எந்த குறையும் சொல்ல முடியாது. பனிப்பொழிவு தான் ஆட்டத்தின் வெற்றியை மாற்றிவிட்டது. ஷிவம் துபே நன்றாகவே பேட்டிங் ஆடினார். இனிவரும் போட்டியில் பேட்டிங்கில் முன்னேற வேண்டும் என்று கூறியுள்ளார்.

12 ஆம் வகுப்பு சிபிஎஸ்இ மார்க்‌ஷீட்டை வெளியிட்ட ஷஃபாலி வர்மா!

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios