கேகேஆர் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகளுக்கு இடையேயான போட்டியில் களமிறங்கும் இரு அணிகளின் உத்தேச ஆடும் லெவனை பார்ப்போம். 

ஐபிஎல் 15வது சீசன் விறுவிறுப்பாக நடந்துவருகிறது. நாளைய (ஏப்ரல் 6) போட்டியில் கேகேஆர் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோதுகின்றன.

ஷ்ரேயாஸ் ஐயர் தலைமையிலான கேகேஆர் அணி, ஆடிய 3 போட்டிகளில் 2 வெற்றிகளுடன் 4 புள்ளிகளை பெற்று புள்ளி பட்டியலில் 2ம் இடத்தில் உள்ளது. ஆனால் மும்பை இந்தியன்ஸ் அணி ஆடிய 2போட்டிகளிலும் தோல்வியை தழுவியதால் முதல் வெற்றியை எதிர்நோக்கி உள்ளது.

புனேவில் நாளை நடக்கும் கேகேஆர் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகளுக்கு இடையேயான போட்டியில் களமிறங்கும் இரு அணிகளின் உத்தேச ஆடும் லெவனை பார்ப்போம்.

கேகேஆர் அணியில் எந்த மாற்றமும் செய்வதற்கான அவசியம் இல்லை என்பதால், அந்த அணியில் எந்த மாற்றமும் செய்யப்படமாட்டாது. கடந்த போட்டியில் ஆடிய அதே ஆடும் லெவன் காம்பினேஷனுடன் தான் அந்த அணி களமிறங்கும்.

உத்தேச கேகேஆர் அணி:

வெங்கடேஷ் ஐயர், அஜிங்க்யா ரஹானே, நிதிஷ் ராணா, ஷ்ரேயாஸ் ஐயர் (கேப்டன்), சாம் பில்லிங்ஸ் (விக்கெட் கீப்பர்), ஆண்ட்ரே ரசல், சுனில் நரைன், டிம் சௌதி, உமேஷ் யாதவ், ஷிவம் மாவி, வருண் சக்கரவர்த்தி.

மும்பை இந்தியன்ஸ் அணியில் ஒரு மாற்றம் செய்யப்படலாம். முதல் 2 போட்டிகளில் ஆடாத சூர்யகுமார் யாதவ் இந்த போட்டியில் ஆட வாய்ப்புள்ளது. எனவே அவர் அணியில் இணைந்தால் அன்மோல்ப்ரீத் சிங் அவரது இடத்தை இழப்பார்.

உத்தேச மும்பை இந்தியன்ஸ் அணி:

ரோஹித் சர்மா (கேப்டன்), இஷான் கிஷன் (விக்கெட் கீப்பர்), சூர்யகுமார் யாதவ், திலக் வர்மா, டிம் டேவிட், கைரன் பொல்லார்டு, முருகன் அஷ்வின், டேனியல் சாம்ஸ், டைமல் மில்ஸ், ஜஸ்ப்ரித் பும்ரா, பாசில் தம்பி.