Kavya Maran Reaction:ஜெயிச்சிருவோம் என்ற நம்பிக்கையில் அப்பாவோடு ஆட்டம் போட்ட காவ்யா மாறனின் ரியாக்‌ஷன் வைரல்!

சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி வெற்றியின் விளிம்பில் இருக்கும் போது தனது அப்பா கலாநிதி மாறன் உடன் இணைந்து காவ்யா மாறன் ஆட்டம் போட்ட வீடியோ வைரலாகி வருகிறது.

Kavya Maran Reaction Going viral during KKR vs SRH 3rd Match of IPL 2024 in 19.1 and 19.5 overs at Eden Gardens rsk

கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகளுக்கு இடையிலான ஐபிஎல் 2024 தொடரின் 3ஆவது போட்டி நடைபெற்றது. இதில், முதலில் டாஸ் வென்ற சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் கேப்டன் பேட் கம்மின்ஸ் பவுலிங் தேர்வு செய்தார். அதன்படி முதலில் பேட்டிங் செய்த கொல்கத்தா அணியில் ஆண்ட்ரே ரஸல் அதிரடியாக விளையாடி ரன்கள் குவிக்க கொல்கத்தா 208 ரன்கள் குவித்தது. இதில், ரஸல், 25 பந்துகளில் 3 பவுண்டரி, 7 சிக்ஸர் உள்பட 65 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார்.

 

 

பின்னர் விளையாடிய சன்ரைசர்ஸ் ஹைதரபாத் அணியில் மாயங்க் அகர்வால் மற்றும் அபிஷேக் சர்மா இருவரும் நல்ல தொடக்கம் கொடுத்தனர். எனினும், சீரான இடைவெளியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி விக்கெட்டுகளை இழந்தது. இருந்த போதிலும் ஹென்ரிச் கிளாசென் மட்டும் நின்று தனி ஒருவராக அதிரடியாக விளையாடி கேகேஆர் அணிக்கு பயத்தை காட்டினார்.

கிளாசென் ஒவ்வொரு சிக்ஸர் அடிக்கவும் ஹைதராபாத் அணியின் உரிமையாளர் கலாநிதி மாறன் மற்றும் காவ்யா மாறன் இருவரும் ஆட்டம் போட்டனர். ஒரு கட்டத்தில் ஹைதராபாத் அணி 19.1 ஓவர்களில் 202 ரன்கள் எடுத்திருந்தது. ஹைதராபாத் வெற்றிக்கு 6 ரன்கள் தேவையிருந்த நிலையில், கலாநிதி மாறன் மற்றும் காவ்யா மாறன் இருவரும் உற்சாகத்தில் துள்ளிக் குதித்தனர். இந்த வீடியோ அப்போது வைரலானது. ஆனால், கடைசியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் 4 ரன்களில் தோல்வி அடையவும் காவ்யா மாறனின் ரியாக்‌ஷன் முற்றிலும் மாறிவிட்டது.

 

 

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios