Asianet News TamilAsianet News Tamil

தொடக்க வீரர்கள் படிக்கல், சமர்த் அபார சதம்..! 10 விக்கெட் வித்தியாசத்தில் கர்நாடகா அபார வெற்றி

தேவ்தத் படிக்கல் மற்றும் ரவிகுமார் சமர்த் ஆகிய இருவரின் சதத்தால் 10 விக்கெட் வித்தியாசத்தில் ரயில்வேஸ் அணியை வீழ்த்தி கர்நாடகா அபார வெற்றி பெற்றது.
 

karnataka beat railways team in vijay hazare trophy
Author
Bengaluru, First Published Feb 28, 2021, 5:11 PM IST

விஜய் ஹசாரே தொடரில் கர்நாடக அணி சிறப்பாக ஆடி வெற்றிகளை குவித்துவருகிறது. ரயில்வேஸ் அணிக்கு எதிராக பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் இன்று நடந்த போட்டியில் டாஸ் வென்ற கர்நாடக அணி ரயில்வேஸை முதலில் பேட்டிங் செய்ய பணித்தது.

இதையடுத்து முதலில் பேட்டிங் ஆடிய ரயில்வேஸ் அணியின் தொடக்க வீரர் பிரதான் சிங் மட்டுமே அபாரமாக ஆடினார். பிரதான் சிங் சிறப்பாக ஆடி சதமடித்து 129 ரன்களை குவித்து ஆட்டமிழந்தார். அவரைத்தவிர வேறு எந்த வீரருமே சரியாக ஆடவில்லை. மற்ற வீரர்கள் பெரிய இன்னிங்ஸ் ஆடவில்லை என்றாலும், அவர்களது சிறிய பங்களிப்பால் 50 ஓவரில் 284 ரன்களை குவித்தது ரயில்வேஸ் அணி.

இதையடுத்து 285 ரன்கள் என்ற சவாலான இலக்கை விரட்டிய கர்நாடக அணியின் தொடக்க வீரர்களான தேவ்தத் படிக்கல் மற்றும் ரவிகுமார் சமர்த் ஆகிய இருவரும் மிகச்சிறப்பாக ஆடி இருவருமே சதமடித்தனர். ரயில்வேஸ் அணி பவுலர்களால் கடைசிவரை இந்த ஜோடியை பிரிக்க முடியவில்லை. ஒரு விக்கெட்டை கூட ரயில்வேஸ் பவுலர்களால் வீழ்த்த முடியவில்லை.

படிக்கல்லும் சமர்த்தும் இணைந்தே இலக்கை விரட்டி, கர்நாடக அணியை வெற்றி பெற செய்துவிட்டனர். படிக்கல் 125 பந்தில் 145 ரன்கள் அடிக்க, சமர்த் 118 பந்தில் 130 ரன்கள் அடிக்க, 41வது ஓவரிலேயே இலக்கை எட்டி 10 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது கர்நாடக அணி.
 

Follow Us:
Download App:
  • android
  • ios