பாகிஸ்தானில் டி20 சூப்பர் லீக் தொடர் நடந்துவருகிறது. கராச்சி கிங்ஸ் மற்றும் லாகூர் காலண்டர்ஸ் அணிகளுக்கு இடையேயான போட்டி கராச்சியில் நடந்தது.

இந்த போட்டியில் முதலில் பேட்டிங் ஆடிய லாகூர் அணியின் தொடக்க வீரரும் கேப்டனுமான சொஹைல் அக்தர் அதிரடியாக ஆடி அரைசதம் அடித்தார். 49 பந்தில் 68 ரன்களை குவித்தார் சொஹைல் அக்தர். அவரை தவிர அந்த அணியில் வேறு யாருமே சரியாக ஆடவில்லை. அனுபவ வீரர் முகமது ஹஃபீஸ் 22 பந்தில் 35 ரன்கள் அடித்தார். அவர் ஓரளவிற்கு ஆடியதால் 20 ஓவரில் லாகூர் அணி  150 ரன்கள் அடித்தது. 

151 ரன்கள் என்ற இலக்குடன் ஆடிய கராச்சி கிங்ஸ் அணியின் தொடக்க வீரர்கள் ஷர்ஜீல் கான் மற்றும் பாபர் அசாம் ஆகிய இருவரும் அபாரமாக ஆடினர். பாபரும் ஷர்ஜீலும் இணைந்து விக்கெட்டை இழந்துவிடாமல், பார்ட்னர்ஷிப் அமைத்து சிறப்பாகவும் தெளிவாகவும் அதேநேரத்தில் அடித்தும் ஆடினர். 

அதிரடியாக இருவருமே அரைசதம் அடித்தனர். முதல் விக்கெட்டை கூட வீழ்த்த முடியாமல் திணறிய லாகூர் அணி, கடைசி வரை ஒரு விக்கெட்டைக்கூட வீழ்த்தவில்லை. பாபர் அசாம் - ஷர்ஜீல் கானின் அதிரடியால் 18வது ஓவரின் முதல் பந்திலேயே இலக்கை எட்டி 10 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் கராச்சி கிங்ஸ் அணி அபார வெற்றி பெற்றது. 

Also Read - ஐபிஎல் நடத்தாதீங்க.. வெளியுறத்துறை அமைச்சகம் அதிரடி

பாபர் அசாம் 69 ரன்களையும் ஷர்ஜீல் கான் 74 ரன்களையும் குவித்து அவுட்டாகாமல் களத்தில் நின்று, அணியை வெற்றி பெற செய்தனர். முதல் விக்கெட்டை கூட வீழ்த்த முடியாமல் அசிங்கப்பட்டது லாகூர் அணி.