பாகிஸ்தான் சூப்பர் லீக் தொடரில் லாகூர் காலண்டர்ஸை 67 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி கராச்சி கிங்ஸ் அணி அபார வெற்றி பெற்றது. 

பாகிஸ்தான் சூப்பர் லீக் தொடர் விறுவிறுப்பாக நடந்துவருகிறது. கராச்சி கிங்ஸ் மற்றும் லாகூர் காலண்டர்ஸ் அணிகளுக்கு இடையேயான போட்டி கராச்சியில் நடந்தது. கராச்சியில் நடந்த போட்டியில் டாஸ் வென்ற லாகூர் காலண்டர்ஸ் அணி ஃபீல்டிங்கை தேர்வு செய்தது.

கராச்சி கிங்ஸ் அணி:

ஜேம்ஸ் வின்ஸ், ஹைதர் அலி, ஷோயப் மாலிக், இர்ஃபான் கான், மேத்யூ வேட், இமாத் வாசிம் (கேப்டன்), பென் கட்டிங், அகிஃப் ஜாவேத், முகமது அமீர், இம்ரான் தாஹிர், ஆமீர் யாமின்.

கேஎல் ராகுல் மீது எனக்கு எந்த வன்மமும் இல்ல.. நல்லதுக்குத்தான் சொல்றேன் - வெங்கடேஷ் பிரசாத் கருத்து

லாகூர் காலண்டர்ஸ் அணி:

ஃபகர் ஜமான், மிர்ஸா தாஹிர் பைக், ஷேய் ஹோப், காம்ரான் குலாம், சிக்கந்தர் ராஸா, ஹுசைன் டலட், டேவிட் வீஸ், லியாம் டாவ்சன், ஹாரிஸ் ராஃப், ஷாஹீன் அஃப்ரிடி (கேப்டன்), ஜமான் கான்.

முதலில் பேட்டிங் ஆடிய கராச்சி கிங்ஸ் அணியின் தொடக்க வீரர்கள் மேத்யூ வேட் மற்றும் ஜேம்ஸ் வின்ஸ் இணைந்து அதிரடியான தொடக்கத்தை அமைத்து கொடுத்தனர். மேத்யூ வேட் 24 பந்தில் 36 ரன்களையும், ஜேம்ஸ் வின்ஸ் 36 பந்தில் 46 ரன்களையும் விளாசினர். பின்வரிசையில் கேப்டன் இமாத் வாசிம் அதிரடியாக ஆடி 19 பந்தில் 2 பவுண்டரிகள் மற்றும் 2 சிக்ஸர்களுடன் 35 ரன்கள் அடிக்க, 20 ஓவரில் 185 ரன்களை குவித்தது.

186 ரன்கள் என்ற சவாலான இலக்கை விரட்டிய லாகூர் காலண்டர்ஸ் அணி வீரர்கள் தொடக்கம் முதலே சீரான இடைவெளியில் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தனர். தொடக்க வீரர் மிர்ஸா தாஹிர் மட்டுமே அதிகபட்சமாக 45 ரன்கள் அடித்தார். மற்ற அனைவருமே சொற்ப ரன்களுக்கு ஆட்டமிழந்ததால் 118 ரன்களுக்கு லாகூர் அணி ஆல் அவுட்டானது.

ICC WTC: புள்ளி பட்டியலில் முதலிடத்தை நோக்கி இந்தியா..! ஆஸ்திரேலிய அணிக்கு பெரும் சரிவு

கராச்சி கிங்ஸ் அணி 67 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. கராச்சி கிங்ஸ் அணியில் அபாரமாக பந்துவீசிய ஆகிப் ஜாவேத் அதிகபட்சமாக 4 விக்கெட் வீழ்த்தினார். கேப்டன் இமாத் வாசிம் 4 ஓவரில் 23 ரன் மட்டுமே விட்டுக்கொடுத்து ஒரு விக்கெட் வீழ்த்தினார்.