Asianet News TamilAsianet News Tamil

PAK vs NZ: கேன் வில்லியம்சன் அபார இரட்டை சதம்.. முதல் இன்னிங்ஸில் மெகா ஸ்கோர் அடித்து நியூசிலாந்து டிக்ளேர்

முதல் டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்ஸில் பாகிஸ்தான் அணி 438 ரன்களை குவிக்க, கேன் வில்லியம்சனின் இரட்டை சதத்தால் நியூசிலாந்து அணி முதல் இன்னிங்ஸில் 612 ரன்களை குவித்து டிக்ளேர் செய்தது.
 

kane williamson double century helps new zealand to score 612 runs in first innings of first test against pakistan
Author
First Published Dec 29, 2022, 3:57 PM IST

நியூசிலாந்து அணி பாகிஸ்தானில் சுற்றுப்பயணம் செய்து 2 டெஸ்ட் மற்றும் 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் ஆடிவருகிறது. முதல் டெஸ்ட் போட்டி கராச்சியில் டிசம்பர் 26ம் தேதி தொடங்கி நடந்துவருகிறது. இந்த போட்டியில் டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி பேட்டிங்கை தேர்வு செய்தது.

பாகிஸ்தான் அணி:

அப்துல்லா ஷாஃபிக், இமாம் உல் ஹக், ஷான் மசூத், பாபர் அசாம் (கேப்டன்), சௌத் ஷகீல், சர்ஃபராஸ் அகமது (விக்கெட் கீப்பர்), அகா சல்மான், நௌமன் அலி, முகமது வாசிம், அப்ரார் அகமது, மிர் ஹம்ஸா.

நியூசிலாந்து அணி:

டாம் லேதம், டெவான் கான்வே, கேன் வில்லியம்சன், ஹென்ரி நிகோல்ஸ், டேரைல் மிட்செல், டாம் பிளண்டெல் (விக்கெட் கீப்பர்), மைக்கேல் பிரேஸ்வெல், டிம் சௌதி (கேப்டன்), இஷ் சோதி, நீல் வாக்னர், அஜாஸ் படேல்.

ICC WTC புள்ளி பட்டியலில் 4ம் இடத்திற்கு பின்தங்கிய தென்னாப்பிரிக்கா..! இந்தியாவின் ஃபைனல் வாய்ப்பு வலுவானது

முதலில் பேட்டிங் ஆடிய பாகிஸ்தான் அணியின் தொடக்க வீரர் அப்துல்லா ஷாஃபிக் (7) மற்றும் 3ம் வரிசை வீரர் ஷான் மசூத்(3) ஆகிய இருவரும் ஸ்டம்பிங் ஆகி ஒற்றை இலக்கத்தில் வெளியேறினர். இமாம் உல் ஹக் 24 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். சௌத் ஷகீல் 22 ரன்களுக்கு அவுட்டானார். கேப்டன் பாபர் அசாம் அபாரமாக பேட்டிங் ஆடி சதமடித்தார். 5வது விக்கெட்டுக்கு பாபர் அசாமும் சர்ஃபராஸ் அகமதுவும் இணைந்து 196 ரன்களை குவித்தனர். 3 ஆண்டுகளுக்கு பின் டெஸ்ட் போட்டியில் களமிறங்கிய சர்ஃபராஸ் அகமது 86 ரன்களுக்கு ஆட்டமிழந்து சதத்தை தவறவிட்டார். பாபர் அசாம் 161 ரன்களை குவிக்க, அகா சல்மான் அபாரமாக பேட்டிங் ஆடி டெஸ்ட் கிரிக்கெட்டில் தனது முதல் சதத்தை பதிவு செய்தார். பாபர் அசாம், அகா சல்மானின் சதங்கள் மற்றும் சர்ஃபராஸ் அகமதுவின் அரைசதத்தால் முதல் இன்னிங்ஸில் 438 ரன்களை குவித்தது பாகிஸ்தான் அணி. 

இதையடுத்து முதல் இன்னிங்ஸை ஆடிய நியூசிலாந்து அணியின் தொடக்க வீரர்கள் டெவான் கான்வே மற்றும் டாம் லேதம் ஆகிய இருவரும் இணைந்து மிகச்சிறப்பான தொடக்கத்தை அமைத்து கொடுத்தனர். முதல் விக்கெட்டுக்கு 183 ரன்களை குவித்தனர். கான்வே 92 ரன்களுக்கு ஆட்டமிழந்து சதத்தை தவறவிட்டார். சதமடித்த டாம் லேதம் 113 ரன்களுக்கு ஆட்டமிழந்தார்.

அதன்பின்னர் கேன் வில்லியம்சன் நிலைத்து நின்று அபாரமாக பேட்டிங்  ஆட, மறுமுனையில் ஹென்ரி நிகோல்ஸ்(22), டேரைல் மிட்செல் (42), டாம் பிளண்டெல்(47) ஆகியோர் ஓரளவிற்கு பங்களிப்பு செய்து ஆட்டமிழந்தனர். இஷ் சோதி 65 ரன்கள் அடித்தார். ஒருமுனையில் நிலைத்து நின்று மிகச்சிறப்பாக பேட்டிங்  ஆடிய கேன் வில்லியம்சன் இரட்டை சதமடித்தார். டெஸ்ட் கிரிக்கெட்டில் தனது 5வது இரட்டை சதத்தை விளாசினார் கேன் வில்லியம்சன். வில்லியம்சன் சதமடித்ததும், 9 விக்கெட் இழப்பிற்கு 612 ரன்களுக்கு முதல் இன்னிங்ஸை டிக்ளேர் செய்தது நியூசிலாந்து அணி.

பாக்ஸிங் டே டெஸ்ட்டில் தென்னாப்பிரிக்காவை இன்னிங்ஸ் வித்தியாசத்தில் வீழ்த்தி தொடரை வென்றது ஆஸ்திரேலியா

174 ரன்கள் பின் தங்கிய நிலையில், 2வது இன்னிங்ஸை தொடங்கியது பாகிஸ்தான் அணி.

Follow Us:
Download App:
  • android
  • ios