Asianet News TamilAsianet News Tamil

இவருதான் சொல்லாம இருந்தாரு.. இப்ப இவரும் சொல்லிட்டாரு.. வில்லியம்சன் அதிரடி

ஐசிசி டெஸ்ட் சாம்பியன்ஷிப்பின் பாயிண்ட் சிஸ்டம் இனிவரும் காலங்களில் கண்டிப்பாக மாற்றப்பட வேண்டும் என நியூசிலாந்து கேப்டன் கேன் வில்லியம்சன் கருத்து தெரிவித்துள்ளார். 
 

kane williamson criticises icc test championship points table
Author
Wellington, First Published Feb 20, 2020, 3:49 PM IST

ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளுக்கு மட்டும் உலக கோப்பை தொடர் நடத்தப்பட்டுவந்த நிலையில், தற்போது டெஸ்ட் போட்டிக்கும் ஐசிசி டெஸ்ட் சாம்பியன்ஷிப் நடத்தப்படுகிறது. கடந்த ஆண்டு நடந்த ஆஷஸ் தொடரிலிருந்து இப்போது ஆடப்பட்டுவரும் அனைத்து டெஸ்ட் போட்டிகளுமே ஐசிசி டெஸ்ட் சாம்பியன்ஷிப்புக்கானதுதான். 

ஐசிசி டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளி பட்டியலில் இந்திய அணி 360 புள்ளிகளுடன் முதலிடத்திலும் ஆஸ்திரேலிய அணி 296 புள்ளிகளுடன் இரண்டாமிடத்திலும் உள்ளன. இங்கிலாந்து மற்றும் பாகிஸ்தான் அணிகள் முறையே 146 மற்றும் 140 புள்ளிகளுடன் மூன்று மற்றும் நான்காமிடத்தில் உள்ளன. 

ஐசிசி டெஸ்ட் சாம்பியன்ஷிப் பாயிண்ட் சிஸ்டத்தை, அது அறிவிக்கப்பட்டபோதே, கில்கிறிஸ்ட், பிரெட் லீ உள்ளிட்ட பல முன்னாள் வீரர்கள் மட்டுமல்லாது இந்திய அணியின் கேப்டன் விராட் கோலியும் கூட விமர்சித்திருந்தார். அந்த பாயிண்ட் சிஸ்டம் குறித்த அதிருப்தியையும் வெளிப்படுத்தியிருந்தனர். முன்னாள், இந்நாள் வீரர்கள் என பாரபட்சமின்றி அனைத்து தரப்பினரையும் இந்த பாயிண்ட் சிஸ்டம் அதிருப்தியடைய செய்தது. 

 

ஐசிசி டெஸ்ட் சாம்பியன்ஷிப் பாயிண்ட் சிஸ்டம்:

ஒவ்வொரு டெஸ்ட் தொடருக்கும் மொத்தமாக 120 புள்ளிகள். அந்த தொடரில் எத்தனை போட்டிகள் இருக்கிறதோ, அவற்றிற்கு 120 புள்ளிகளிலிருந்து பாயிண்ட்டுகள் பகிர்ந்தளிக்கப்படும். அதாவது 2 போட்டிகள் கொண்ட தொடர் என்றால், ஒரு வெற்றிக்கு 60 புள்ளிகள், மூன்று போட்டிகள் கொண்ட தொடர் என்றால் ஒரு வெற்றிக்கு 40 புள்ளிகள், 5 போட்டிகள் கொண்ட தொடர் என்றால் ஒரு வெற்றிக்கு 24 புள்ளிகள். 

வெற்றி அடையும் அணிக்கான பாயிண்ட் = ( 120/அந்த தொடரின் போட்டிகளின் எண்ணிக்கை).

இந்த பாயிண்ட்ஸ் சிஸ்டம் அதிருப்தியளிக்கக்கூடியதுதான். ஏனெனில் இந்தியா, ஆஸ்திரேலியா, இங்கிலாந்து போன்ற பெரிய அணிகள் சொந்த மண்ணில், 2 போட்டிகள் கொண்ட தொடரில் மொக்கை அணியை வீழ்த்தினால் ஒரு வெற்றிக்கு 60 புள்ளிகள். அதேநேரத்தில் வெளிநாட்டில் 5 போட்டிகள் கொண்ட ஒரு தொடரில், ஒரு அணி கஷ்டப்பட்டு போராடி வென்றால், அதற்கு வெறும் 24 புள்ளிகள் தான்.

இந்தியா - நியூசிலாந்து இடையேயான 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரின் முதல் போட்டி நாளை தொடங்கவுள்ள நிலையில், இந்த பாயிண்ட் சிஸ்டத்தை மாற்ற வேண்டும் என்று நியூசிலாந்து கேப்டன் கேன் வில்லியம்சன் கருத்து தெரிவித்துள்ளார். 

இதுகுறித்து பேசியுள்ள வில்லியம்சன், இந்த பாயிண்ட் சிஸ்டம் சரியான முறையல்ல. ஐசிசி டெஸ்ட் சாம்பியன்ஷிப் சரியான முன்னெடுப்பு. ஆனால் பாயிண்ட் சிஸ்டம் தான் சரியில்லை. முதல் முறை என்பதால் இப்படி இருக்கிறது. அடுத்தடுத்த டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடர்களில் இந்த பாயிண்ட் சிஸ்டம் மாற்றப்படும் என நினைக்கிறேன். 

சில அணிகள் ஐந்து போட்டிகளில் ஆடுகின்றன. சில அணிகள் 2 போட்டிகள் மட்டுமே கொண்ட தொடரில் ஆடுகின்றன. வெவ்வேறு நாடுகள், வெவ்வேறு எண்ணிக்கையிலான போட்டிகள் கொண்ட தொடர்கள் ஆடப்படுகின்றன. எனவே பாயிண்ட் சிஸ்டர் முறையானதாக இருக்க வேண்டும். எல்லாவற்றையும் ஒரே மாதிரி கணக்கிட முடியாது. ஆனால் இதற்கெல்லாம் ஒப்புக்கொண்டுதான் நாம் கையெழுத்திட்டிருக்கிறோம். ஆனால் எதிர்காலத்தில் இந்த பாயிண்ட் சிஸ்டம் மாற்றியமைக்கப்படும் என்பதில் சந்தேகமில்லை என்று வில்லியம்சன் தெரிவித்துள்ளார். 
 

Follow Us:
Download App:
  • android
  • ios