IPL 2023: பட்லர் காட்டடி பேட்டிங்; சதம் மிஸ்ஸிங்! ஜெய்ப்பூரில் அதிகபட்ச ஸ்கோரை அடித்து ராஜஸ்தான் ராயல்ஸ் சாதனை

 சன்ரைசர்ஸுக்கு எதிரான போட்டியில் முதலில் பேட்டிங் ஆடிய ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 20 ஓவரில் 214 ரன்களை குவித்து, 215 ரன்கள் என்ற கடின இலக்கை சன்ரைசர்ஸுக்கு நிர்ணயித்துள்ளது.
 

jos buttler and sanju samson fifties help rajsathan royals to register record score in jaipur and set tough target to srh in ipl 2023

ஐபிஎல் 16வது சீசன் சுவாரஸ்யமான கட்டத்தில் இருக்கும் நிலையில், அகமதாபாத்தில் இன்று நடந்துவரும் போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகள் மோதின. இந்த போட்டியில் டாஸ் வென்ற ராஜஸ்தான் ராயல்ஸ் கேப்டன் சஞ்சு சாம்சன் பேட்டிங்கை தேர்வு செய்தார். 

ராஜஸ்தான் ராயல்ஸ் அணி:

பட்லர், ஜெய்ஸ்வால், சஞ்சு சாம்சன் (கேப்டன்), ஜோ ரூட், த்ருவ் ஜுரெல், ஷிம்ரான் ஹெட்மயர், அஷ்வின், முருகன் அஷ்வின், சந்தீப் ஷர்மா, குல்திப் யாதவ், சாஹல்.

IPL 2023: 13 ஆண்டுகளுக்கு பிறகு சென்னை மண்ணில் மும்பை அணியை வீழ்த்தி சிஎஸ்கே அபார வெற்றி

சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி:

அபிஷேக் ஷர்மா, ராகுல் திரிபாதி, ஐடன் மார்க்ரம் (கேப்டன்), கிளாசன், க்ளென் ஃபிலிப்ஸ், அப்துல் சமாத், மார்கோ யான்சென், விவ்ராந்த் சர்மா, மயன்க் மார்கண்டே, புவனேஷ்வர் குமார், டி.நடராஜன்.

முதலில் பேட்டிங் ஆடிய ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் தொடக்க வீரர்கள் யஷஸ்வி ஜெய்ஸ்வால் மற்றும் ஜோஸ் பட்லர் இணைந்து அதிரடியாக பேட்டிங் ஆடி முதல் விக்கெட்டுக்கு 5 ஓவரில் 54 ரன்களை சேர்த்தனர். யஷஸ்வி ஜெய்ஸ்வால் 18 பந்தில் 35 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். அதன்பின்னர் பட்லரும் சாம்சனும் இணைந்து காட்டடி அடித்து இருவருமே அரைசதம் அடித்தனர். அதிரடியாக ஆடி சதத்தை நெருங்கிய பட்லர், 95 ரன்களுக்கு ஆட்டமிழந்து சதத்தை தவறவிட்டார்.

IPL 2023: குஜராத்துக்கு எதிரான தோல்வி.. ராஜஸ்தான் பேட்ஸ்மேன்களை செம காட்டு காட்டிய சங்கக்கரா

சஞ்சு சாம்சன் 38 பந்தில் 66 ரன்கள் அடித்து கடைசிவரை நின்று இன்னிங்ஸை முடித்து கொடுத்தார். பட்லர், சாம்சனின் அதிரடியால் 20 ஓவரில் 214 ரன்களை குவித்து, 215 ரன்கள் என்ற கடின இலக்கை சன்ரைசர்ஸுக்கு நிர்ணயித்தது. ஜெய்ப்பூர் மைதானத்தில் இதுவே ஒரு அணி அடித்த அதிகபட்ச ஸ்கோர் ஆகும். ஜெய்ப்பூரில் அதிகபட்ச ஸ்கோரை பதிவு செய்து ராஜஸ்தான் அணி சாதனை படைத்தது.

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios