Asianet News TamilAsianet News Tamil

#ENGvsIND ஒரு டீம்ல 11 பேர் தான் ஆடமுடியும்..! அது எந்த 11 பேர் என்பது கேப்டனோட முடிவு தான் - ஜாண்டி ரோட்ஸ்

இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் இந்திய அணியில் சீனியர் ஸ்பின்னர் ரவிச்சந்திரன் அஷ்வின் ஆடாதது குறித்து தென்னாப்பிரிக்க முன்னாள் ஜாம்பவான் ஜாண்டி ரோட்ஸ் கருத்து கூறியுள்ளார்.
 

jonty rhodes opines ravichandran ashwin excluding from india playing eleven against england test series
Author
Leeds, First Published Aug 28, 2021, 9:13 PM IST

இங்கிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணியின் சீனியர் அஷ்வின் அணியில் எடுக்கப்படவில்லை. அதுவே கடும்  விமர்சனத்துக்குள்ளானது. எல்லா கண்டிஷனிலும் சிறப்பாக பந்துவீசக்கூடிய சீனியர் ஸ்பின்னரும் மேட்ச் வின்னருமான ரவிச்சந்திரன் அஷ்வினை, கண்டிஷனை கருத்தில்கொள்ளாமல் அனைத்து டெஸ்ட் போட்டியிலும் ஆடவைக்க வேண்டும் என்று முன்னாள் வீரர்கள் பலரும் கருத்து தெரிவித்தனர்.

ஆனால் லண்டன் லார்ட்ஸில் நடந்த 2வது டெஸ்ட்டில் கண்டிஷன் மேகமூட்டமாக இருந்ததால் ஸ்பின்னிற்கு ஒத்துழைப்பு இருக்காது என்பதால் அஷ்வின் எடுக்கப்படவில்லை.

3வது டெஸ்ட் நடக்கும் லீட்ஸ் ஆடுகளமும் கண்டிஷனும் ஸ்பின்னிற்கு சாதகமாக இருக்கும் என்பதால், அஷ்வினை கண்டிப்பாக எடுக்க வேண்டும் என்று முன்னாள் வீரர்கள் பலரும் கருத்து கூறினர். இங்கிலாந்தை சேர்ந்த முன்னாள் வீரர்களே அதைத்தான் தெரிவித்தனர்.

ஆனால் 3வது டெஸ்ட்டிலும் அஷ்வினை எடுக்கவில்லை. 3வது டெஸ்ட்டில் இந்திய அணி தோல்வியையும் தழுவியது. அஷ்வின் புறக்கணிப்பு ரசிகர்கள் மத்தியில் கடும் அதிருப்தியையும், பெரும் விவாதத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில், அஷ்வின் புறக்கணிப்பு குறித்து கருத்து தெரிவித்த ஜாண்டி ரோட்ஸ், 1-0 என தொடரில் முன்னிலையில் இருக்கும்போது, அஷ்வினை கண்டிப்பாக அணியில் எடுக்க வேண்டும் என்று எதிர்பார்க்கமுடியாது. அது அணி நிர்வாகத்தின் தேர்வு. களத்தில் அணியை வழிநடத்துவது கேப்டன் தான். எனவே அவர் எந்த பவுலிங் காம்பினேஷன் 20 விக்கெட்டுகளையும் வீழ்த்தி கொடுக்கும் என நம்புகிறாரோ, அந்த வீரர்களுடன் தான் களமிறங்குவார். ஒரு அணியில் 11 வீரர்கள் மட்டுமே ஆடமுடியும். எனவே வாய்ப்பு கிடைக்காதவர்கள் வெளியே உட்கார்ந்துதான் ஆகவேண்டும் என்று ஜாண்டி ரோட்ஸ் கருத்து தெரிவித்துள்ளார்.
 

Follow Us:
Download App:
  • android
  • ios