டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிக சதம் அடித்த சாதனை மன்னர்கள்!
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஆஷஸ் தொடரின் முதல் டெஸ்ட் போட்டியில் சதம் அடித்ததன் மூலமாக டெஸ்ட் கிரிக்கெட்டில் தனது 30ஆவது சதத்தை பூர்த்தி செய்தார்.
ஆஸ்திரேலியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான ஆஷஸ் தொடர் தொடங்கியுள்ளது. இங்கிலாந்தில் உள்ள பர்மிங்காமில் ஆஷஸ் தொடரின் முதல் டெஸ்ட் போட்டி நடந்து வருகிறது. இதில், டாஸ் வென்ற இங்கிலாந்து அணியின் கேப்டன் பென் ஸ்டோக்ஸ் பேட்டிங் தேர்வு செய்தார்.
முடிஞ்சா அடின்னு சவால் விட்டு, முதல் நாளிலேயே 393 ரன்கள் எடுத்து டிக்ளேர் செய்த இங்கிலாந்து!
ஆஸ்திரேலியா:
டேவிட் வார்னர், உஸ்மான் கவாஜா, மார்னஸ் லபுஷேன், ஸ்டீவ் ஸ்மித், டிராவிஸ் ஹெட், கேமரூன் க்ரீன், அலெக்ஸ் கேரி (விக்கெட் கீப்பர்), பேட் கம்மின்ஸ் (கேப்டன்), நாதன் லயான், ஜோஸ் ஹசல்வுட், ஸ்காட் போலண்ட்.
இங்கிலாந்து:
பென் டக்கெட், ஜாக் கிராவ்லி, ஆலி போப், ஜோ ரூட், ஹாரி ப்ரூக், பென் ஸ்டோக்ஸ் (கேப்டன்), ஜானி பேர்ஸ்டோவ் (விக்கெட் கீப்பர்), மொயீன் அலி, ஸ்டூவர்ட் பிராட், ஆலி ராபின்ஸன், ஜேம்ஸ் ஆண்டர்சன்
அதன்படி முதலில் ஆடிய இங்கிலாந்து அணிக்கு தொடக்க வீரர் ஜாக் கிராவ்லி 61 ரன்கள் எடுத்தார். டக்கெட் 12 ரன்களில் ஆட்டமிழக்க, ஆலி போப் 31 ரன்கள் சேர்த்தார். இதையடுத்து ஜோ ரூட் மற்றும் ஜானி பேர்ஸ்டோவ் நிதானமாக ஆடி ரன்கள் சேர்த்தனர். ஒரு கட்டத்தில் ஜோ ரூட் தனது 30 ஆவது சதத்தை பூர்த்தி செய்தார்.
ஜானி பேர்ஸ்டோவ் 78 ரன்களில் ஆட்டமிழக்க, அடுத்து வந்த மொயீன் அலி 18, ஸ்டூவர் பிராட் 16 ரன்களில் வெளியேறினர். ஒரு கட்டத்தில் இங்கிலாந்து 8 விக்கெட் இழப்பிற்கு 393 ரன்கள் எடுத்திருந்த நிலையில், கேப்டன் பென் ஸ்டோக்ஸ் டிக்ளேர் செய்வதாக அறிவித்தார்.
ஒரு போதும் ஒரு பந்து வீச்சாளராக மாறவே கூடாது – ரவிச்சந்திரன் அஸ்வின் ஃபீல் அன்ஹேப்பி!
ஜோ ரூட் இந்தப் போட்டியில் சதம் அடித்ததன் மூலமாக டெஸ்ட் கிரிக்கெட்டில் 30ஆவது சதம் அடித்து அதிக முறை சதம் அடித்தவர்களின் பட்டியலில் 2ஆவது இடம் பிடித்துள்ளது. இதற்கு முன்னதாக ஆஸ்திரேலிய வீரர் ஸ்டீவ் ஸ்மித் 31 முறை சதம் அடித்து அதிக சதம் அடித்தவர்களின் பட்டியலில் முதலிடம் பிடித்துள்ளார். நியூசிலாந்து வீரர் கேன் வில்லியம்சன் மற்றும் இந்திய வீரர் விராட் கோலி இருவரும் 28 சதங்களுடன் 3ஆவது இடங்கள் பிடித்துள்ளனர்.