Asianet News TamilAsianet News Tamil

ரஞ்சி தொடர்: முதல் ஓவரில் ஹாட்ரிக் விக்கெட்.. வரலாற்று சாதனை படைத்த ஜெய்தேவ் உனாத்கத்

ரஞ்சி தொடரில் டெல்லி அணிக்கு எதிரான போட்டியில் முதல் ஓவரில் ஹாட்ரிக் விக்கெட் வீழ்த்திய முதல் பவுலர் என்ற வரலாற்று சாதனையை படைத்துள்ளார் ஜெய்தேவ் உனாத்கத்.
 

jaydev unadkat scripts historic record in ranji trophy by taking hat trick wickets in very first over in the match against delhi
Author
First Published Jan 3, 2023, 11:43 AM IST

ரஞ்சி தொடரில் சௌராஷ்டிரா - டெல்லி அணிகளுக்கு இடையேயான போட்டி ராஜ்கோட்டில் நடந்துவருகிறது. இந்த போட்டியில் டாஸ் வென்ற டெல்லி அணி பேட்டிங்கை தேர்வு செய்தது.

டெல்லி அணி:

துருவ் ஷோரே, யஷ் துல் (கேப்டன்), ஜாண்டி சிந்து, ஆயுஷ் பதோனி, வைபவ் ராவல், லக்‌ஷய் தரேஜா (விக்கெட் கீப்பர்), லலித் யாதவ், ஷிவாங்க் வைஷிஷ்ட், பிரன்ஷு விஜய்ரன், ரித்திக் ஷோகீன், குல்திப் யாதவ்.

IND vs SL: ஸ்லெட்ஜிங்லாம் தேவையில்ல.. எங்கள் உடல்மொழியிலயே இலங்கையை மிரட்டிருவோம் - ஹர்திக் பாண்டியா

சௌராஷ்டிரா அணி:

ஜெய் கோஹில், ஹர்விக் தேசாய் (விக்கெட் கீப்பர்), சிராக் ஜானி, ஷெல்டான் ஜாக்சன், ஆர்பிட் வசவடா, சமர்த் வியாஸ், ப்ரெராக் மன்கத், பார்த் பட், தர்மேந்திரசின் ஜடேஜா, யுவராஜ்சின் தோடியா, ஜெய்தேவ் உனாத்கத்(கேப்டன்).

முதலில் பேட்டிங்  ஆடிய டெல்லி அணியின் பாதி விக்கெட்டுகளை தனது முதல் 2 ஓவர்களில் வீழ்த்தி அசத்தினார் ஜெய்தேவ் உனாத்கத். இன்னிங்ஸின் முதல் ஓவரிலேயே துருவ் ஷோரே(0), வைபவ் ராவல் (0), யஷ் துல்(0) ஆகிய மூவரையும் அடுத்தடுத்த பந்துகளில் வீழ்த்தி ஹாட்ரிக் விக்கெட் வீழ்த்தினார். இதன்மூலம் ரஞ்சி கிரிக்கெட் வரலாற்றில் முதல் ஓவரில் ஹாட்ரிக் வீழ்த்திய முதல் பவுலர் என்ற வரலாற்று சாதனையை படைத்துள்ளார் ஜெய்தேவ் உனாத்கத்.

சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் பாகிஸ்தானுக்கு எதிராக முதல் ஓவரில் ஹாட்ரிக் விக்கெட் வீழ்த்திய வரலாற்று சாதனைக்கு இர்ஃபான் பதான் சொந்தக்காரர். சர்வதேச டெஸ்ட்டில் முதல் ஓவரில் இர்ஃபான் பதான் ஹாட்ரிக் வீழ்த்திய நிலையில், ரஞ்சி தொடரில் ஜெய்தேவ் உனாத்கத் ஹாட்ரிக் வீழ்த்தி சாதனை படைத்துள்ளார்.

மீண்டும் ஒரு சான்ஸ் தரோம்; இப்பவாவது உருப்படியா செயல்படுங்க! இந்திய அணியின் புதிய தேர்வுக்குழு தலைவர் இவர்தான்

இன்னிங்ஸின் 2வது ஓவரில் ஆயுஷ் பதோனியை (0) சிராக் ஜானி வீழ்த்தினார். இன்னிங்ஸின் 3வது ஓவரை தனது 2வது ஓவராக வீசிய ஜெய்தேவ் உனாத்கத், ஜாண்டி சிந்து(4), லலித் யாதவ்(0) ஆகிய இருவரையும் வீழ்த்தினார். தனது முதல் ஓவரில் 3 விக்கெட்டுகளை வீழ்த்தி உனாத்கத், 2வது ஒவரில் 2 விக்கெட் என தனது இரண்டே ஓவரில் டெல்லி அணியின் பாதி விக்கெட்டுகளை வீழ்த்திவிட்டார். லக்‌ஷய் தரேஜாவையும் ஒரு ரன்னுக்கு உனாத்கத் வீழ்த்த, டெல்லி அணி வெறும் 10 ரன்களுக்கு 7 விக்கெட்டுகளை இழந்துவிட்டது.

Follow Us:
Download App:
  • android
  • ios