மீண்டும் ஒரு சான்ஸ் தரோம்; இப்பவாவது உருப்படியா செயல்படுங்க! இந்திய அணியின் புதிய தேர்வுக்குழு தலைவர் இவர்தான்
இந்திய அணியின் தேர்வுக்குழு தலைவராக மீண்டும் சேத்தன் ஷர்மாவே நியமிக்கப்படவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்திய அணி ஆசிய கோப்பை, டி20 உலக கோப்பை ஆகிய 2 பெரிய ஐசிசி தொடர்களில் தோல்வியை தழுவியது. 2021ம் ஆண்டு டி20 உலக கோப்பையிலும் தோற்றது. இந்த 3 பெரிய தொடர்களிலுமே இந்திய அணி தேர்வு கடும் விமர்சனத்துக்குள்ளானது.
2022ல் ஆசிய கோப்பை, டி20 உலக கோப்பை என தொடர்ந்து 2 பெரிய தொடர்களில் தோற்றதன் விளைவாக, தேர்வுக்குழுவின் செயல்பாட்டின் மீது அதிருப்தியடைந்த பிசிசிஐ தேர்வுக்குழுவை கலைத்தது. புதிய தேர்வாளர்களுக்கான விண்ணபங்கள் பெறப்பட்டன.
இந்திய டி20 அணியின் நிரந்தர கேப்டன் ஹர்திக் பாண்டியா..? இர்ஃபான் பதான் கடும் எச்சரிக்கை
வெங்கடேஷ் பிரசாத், ஹேமங் பதானி உள்ளிட்ட பல முன்னாள் வீரர்கள் தேர்வுக்குழு தலைவர் பதவிக்கு விண்ணப்பித்திருந்தனர். வெங்கடேஷ் பிரசாத் தேர்வுக்குழு தலைவராக நியமிக்கப்படலாம் என பேசப்பட்டது. ஆனால் மீண்டும் சேத்தன் ஷர்மாவுக்கே வாய்ப்பளிக்கப்படவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
2020 டிசம்பரிலிருந்து 2022 டிசம்பர் வரை இந்திய அணியின் தேர்வுக்குழு தலைவராக இருந்த சேத்தன் ஷர்மாவின் செயல்பாடு மீது அதிருப்தி இருந்தாலும், 2 ஆண்டுகளாக இந்திய அணியை தேர்வு செய்து, இந்திய அணியின் செயல்பாட்டையும், வீரர்களையும் நெருக்கமாக இருந்து உன்னிப்பாக இருந்த கவனித்தவர் என்ற முறையில் அவருக்கு மீண்டும் ஒரு வாய்ப்பு வழங்கப்படுவதாக தெரிகிறது.
ஹர்வீந்தர் சிங், அமய் குராசியா, அஜய் ரத்ரா, எஸ்.எஸ். தாஸ், கான்னார் வில்லியம்ஸ் ஆகியோருக்கு இடையே தேர்வுக்குழு உறுப்பினர்கள் பொறுப்புக்கான நேர்காணலில் கலந்துகொண்டுள்ளனர்.