SA vs IND 2nd Test, Bumrah:தென் ஆப்பிரிக்காவிற்கு எதிராக 3ஆவது முறையாக 5 விக்கெட்டுகள் கைப்பற்றி பும்ரா சாதனை!

தென் ஆப்பிரிக்கா அணிக்கு எதிரான 2ஆவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்ப்ரித் பும்ரா 5 விக்கெட்டுகள் கைப்பற்றி சாதனை படைத்துள்ளார்.

Jasprit Bumrah takes 5 wickets for the 3rd time against South Africa in Test Cricket rsk

இந்தியா மற்றும் தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான 2ஆவது டெஸ்ட் போட்டி தற்போது கேப்டவுனில் நடந்து வருகிறது. இதில், டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த தென் ஆப்பிரிக்கா அணி முகமது சிராஜின் வேகத்தில் 55 ரன்களுக்கு சுருண்டது. இதில் சிராஜ் 6 விக்கெட்டுகளும், ஜஸ்ப்ரித் பும்ரா மற்றும் முகேஷ் குமார் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகள் கைப்பற்றினர். பின்னர், இந்திய அணி முதல் இன்னிங்ஸ் விளையாடி 153 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. இதில், ஒரே ஸ்கோரில் இந்திய அணி 6 விக்கெட்டுகளை இழந்து வரலாற்றில் இடம் பெற்றது.

ICC awards 2023: பரிந்துரைக்கப்பட்டவர்களின் பட்டியலில் இடம் பெற்ற சூர்யகுமார் யாதவ், யஷஸ்வி ஜெய்ஸ்வால்!

அதாவது, டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் முதல் முறையாக இந்திய அணி 153 ரன்களில் 6 விக்கெட்டுகளை இழந்துள்ளது. இதில், விராட் கோலி மட்டும் அதிகபட்சமாக 46 ரன்கள் எடுத்தார். இதையடுத்து தென் ஆப்பிரிக்கா 2ஆவது இன்னிங்ஸ் விளையாடியது. இதில், முதல் நாள் முடிவில் தென் ஆப்பிரிக்கா 3 விக்கெட்டுகளை இழந்து 63 ரன்கள் எடுத்தது. எய்டன் மார்க்ரம் 36 ரன்களுடனும், டேவிட் பெடிங்காம் 7 ரன்களுடனும் களத்தில் இருந்தனர். இதில், முகேஷ் குமார் 2 விக்கெட்டும், பும்ரா ஒரு விக்கெட்டும் எடுத்தினர்.

தென் ஆப்பிரிக்கா தான் மோசமான சாதனைன்னா, இந்தியா அதுக்கு மேல வரலாற்று சாதனை – 153, ஒரே ஸ்கோரில் 6 விக்கெட்!

பின்னர் மார்க்ரம் மற்றும் பெடிங்காம் 2ஆம் நாள் பேட்டிங்கை தொடங்கினர். இன்றைய நாளின் முதல் ஓவரிலேயே பும்ரா வீசிய பந்தில் பெடிங்காம் ஆட்டமிழந்தார். அடுத்து வந்த கைல் வெர்ரேனே 9 ரன்களில் பும்ரா பந்தில் ஆட்டமிழந்தார். இவரைத் தொடர்ந்து வந்த மார்கோ ஜான்சன் 11 ரன்களில் பும்ரா பந்தில் ஆட்டமிழந்தார். கடைசியாக கேசவ் மகராஜ் விக்கெட்டை கைப்பற்றி டெஸ்ட் கிரிக்கெட்டில் 9 ஆவது முறையாக 5 விக்கெட்டுகளை கைப்பற்றியுள்ளார். தென் ஆப்பிரிக்கா அணிக்கு எதிராக 3ஆவது முறையாக 5 விக்கெட்டுகளை கைப்பற்றியுள்ளார். அதுவும் கேப்டவுனில் நடந்து வரும் இந்த மைதானத்தில் 2ஆவது முறையாக பும்ரா 5 விக்கெட்டுகளை கைப்பற்றியுள்ளார்.

South Africa vs India 2nd Test: ஒரு ரன்னு கூட எடுக்கல, 6 விக்கெட் காலி – 46 ரன்னுக்கு அவுட்டான கோலி!

பும்ரா சிறப்பாக பந்து வீசுவதை வீட்டில் இருந்தபடியே அவரது மகன் அங்கத் டிவியில் பார்ப்பதை மனைவி சஞ்சனா கணேசன் இன்ஸ்டா ஸ்டோரியில் பகிர்ந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios