ICC awards 2023: பரிந்துரைக்கப்பட்டவர்களின் பட்டியலில் இடம் பெற்ற சூர்யகுமார் யாதவ், யஷஸ்வி ஜெய்ஸ்வால்!

2023ஆம் ஆண்டிற்கான வளர்ந்து வரும் வீரர், வீராங்களைகள், சிறந்த வீரர், வீராங்களின் பெயர்களை ஐசிசி பரிந்துரை செய்துள்ளது. இதில், சூர்யகுமார் யாதவ் மற்றும் யஷஸ்வி ஜெய்ஸ்வால் ஆகியோரது பெயர் இடம் பெற்றுள்ளது.
 

Suryakumar Yadav and Yashasvi Jaiswal Nominated for ICC Cricketer of the Year and Emerging Cricketer of the Year List rsk

ஒவ்வொரு ஆண்டும் சிறந்த வீரர், வீராங்கனைகள், சிறந்த ஒருநாள் அணி, டி20 மற்றும் டெஸ்ட் ஆகியவற்றில் சிறந்து விளங்கும் வீரர், வீராங்கனைகளுக்கு ஐசிசி விருதுகளை வழங்கி வருகிறது. அந்த வகையில், 2023 ஆம் ஆண்டிற்கான வளர்ந்து வரும் இளம் வீரர், வீராங்கனைகளின் பெயர்களை ஐசிசி பரிந்துரை செய்துள்ளது.

தென் ஆப்பிரிக்கா தான் மோசமான சாதனைன்னா, இந்தியா அதுக்கு மேல வரலாற்று சாதனை – 153, ஒரே ஸ்கோரில் 6 விக்கெட்!

கடந்த ஆண்டு வெற்றி பெற்ற சூர்யகுமார் யாதவ் மீண்டும் ஆண்களுக்கான கிரிக்கெட் உலகக் கோப்பை பிரிவில் பரிந்துரைக்கப்பட்டார். இதே போன்று முன்னாள் 2 முறை Rachael Heyhoe Flint Trophy வென்ற எலிஸ் பெர்ரி வளர்ந்து வரும் விருதுகளுக்கான போட்டியாளர்களில் இடம் பெற்றுள்ளார். சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி) இன்று ஐ.சி.சி விருதுகள் 2023 இல் முதல் நான்கு பட்டியலை அறிவித்தது, இது ஆண்டின் சிறந்த ஆண்கள் மற்றும் பெண்கள் டி20 கிரிக்கெட் வீரர் விருதுகள் மற்றும் வளர்ந்து வரும் ஆண்கள் மற்றும் மகளிர் கிரிக்கெட் வீரர் விருதுகளுக்கான போட்டியில் சிறந்த வீரர்களை முன்னிலைப்படுத்துகிறது. 

South Africa vs India 2nd Test: ஒரு ரன்னு கூட எடுக்கல, 6 விக்கெட் காலி – 46 ரன்னுக்கு அவுட்டான கோலி!

ICC ஆண்கள் T20I சிறந்த கிரிக்கெட் வீரர் பிரிவு:

இந்தியாவின் சூர்யகுமார் யாதவ், 2022 ஆம் ஆண்டு இதே பிரிவில் மகுடம் சூடிய பிறகு, தொடர்ந்து இரண்டாவது முறையாக பரிசை வெல்லும் போட்டியில் இடம் பெற்றுள்ளார். சூர்யகுமார் யாதவ் உடன் இணைந்து டி20 போட்டி பேட்ஸ்மேன்களின் பட்டியலில் நியூசிலாந்தின் மார்க் சாப்மேன், உகாண்டாவின் அல்பேஷ் ரம்ஜானி, ஜிம்பாப்வேயின் சிக்கந்தர் ராசா ஆகியோர் இடம் பெற்றுள்ளனர்.

ஐசிசி மகளிர் T20I சிறந்த கிரிக்கெட் வீராங்கனைக்கான பிரிவு:

இந்தப் பட்டியலில் இலங்கையின் சாமரி அத்தபத்து, இங்கிலாந்து அணியின் சுழற்பந்து வீச்சாளர் சோஃபி எக்லெஸ்டோன், வெஸ்ட் இண்டீஸ் அணியின் ஆல்ரவுண்டர் ஹெய்லி மேத்யூஸ் மற்றும் ரேச்சல் ஹெய்ஹோ பிளின்ட் டிராபியின் முன்னாள் இரண்டு முறை வெற்றியாளரான எலிஸ் பெர்ரி ஆகியோர் இணைந்துள்ளனர்.

மோசமான சாதனையில் முதலிடம் பிடித்த தென் ஆப்பிரிக்கா – மீண்டு வந்து சிறப்பான சம்பவம் செய்த டீம் இந்தியா!

ஐசிசியின் வளர்ந்து வரும் மகளிர் கிரிக்கெட் வீராங்கனை பிரிவு:

வங்கதேசத்தின் மருஃபா அக்டர், இங்கிலாந்தின் லாரன் பெல், ஸ்காட்லாந்தின் டார்சி கார்ட்டர் மற்றும் ஆஸ்திரேலியாவின் ஃபோப் லிட்ச்பீல்டு ஆகியோர் 2023 ஆம் ஆண்டில் குறிப்பிடத்தக்க ஃபார்மை அனுபவித்த பின்னர் கிரீடத்திற்கான நான்கு முன்னணி போட்டியாளர்களாக பெயரிடப்பட்டனர்.

ஐசிசியின் வளர்ந்து வரும் ஆண்கள் கிரிக்கெட் வீரர் பிரிவு:

இதில் உலகக் கோப்பையில் ஜொலித்த கிரிக்கெட் வீரர்கள் இடம் பெற்றுள்ளனர். அதில், தென் ஆப்பிரிக்காவி ஜெரால்ட் கோட்ஸி, இந்தியாவின் யஷஸ்வி ஜெய்ஸ்வால், இலங்கையின் தில்ஷன் மதுஷங்கா மற்றும் நியூசிலாந்தின் ரச்சின் ரவீந்திரா ஆகியோர் இடம் பெற்றுள்ளனர்.

தென் ஆப்பிரிக்காவில் ஒலித்த ராம் சியா ராம் பாடல்: ஸ்ரீராமரைப் போன்று வில் அம்புகளை இழுத்து போஸ் கொடுத்த கோலி!

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios