கேப்டவுனில் நடந்து வரும் இந்தியாவிற்கு எதிரான 2ஆவது டெஸ்ட் போட்டியில் தென் ஆப்பிரிக்காவில் ஒலிக்கப்பட்ட ராம் சியாம் ராம் என்ற பாடலுக்கு விராட் கோலி ஸ்ரீ ராமரைப் போன்று வில் அம்புகளை இழுத்து போஸ் கொடுத்த வீடியோ, புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

இந்தியா மற்றும் தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான 2ஆவது டெஸ்ட் போட்டி தற்போது கேப்டவுனில் நடந்து வருகிறது. இதில், டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த தென் ஆப்பிரிக்கா அணி முகமது சிராஜ் வேகத்தில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 55 ரன்கள் மட்டுமே எடுத்து மோசமான சாதனை படைத்தது. இந்தப் போட்டியில் எப்படி முகமது சிராஜ் தனது சிறப்பான பந்து வீச்சின் மூலமாக அனைவரது கவனத்தை ஈர்த்தாரோ, அதே போன்று இந்திய அணியின் நம்பிக்கை நட்சத்திரமான விராட் கோலி தனது சிறப்பான செயலால் உலகளவில் கிரிக்கெட் ஆர்வலர்கள், ரசிகர்களது கவனத்தை ஈர்த்துள்ளார்.

மோசமான சாதனையில் முதலிடம் பிடித்த தென் ஆப்பிரிக்கா – மீண்டு வந்து சிறப்பான சம்பவம் செய்த டீம் இந்தியா!

தென் ஆப்பிரிக்கா அணி 15.5 ஓவர்களில் 6 விக்கெட்டுகளை இழந்து 34 ரன்கள் எடுத்திருந்த போது கேசவ் மகாராஜ் களமிறங்கினார். அப்போது, தென் ஆப்பிரிக்கா டிஜே, ராம் சியா ராம் என்ற பக்தி பாடலை ஒலிக்கச் செய்தார். இதனை கேட்ட விராட் கோலி, தனது கைகளை மடக்கி, ராமரின் சின்னமான தோரணையை நினைவுபடுத்தும் வகையில், ஒரு வில் அம்பை இழுத்து, ராமருக்கு ஒரு தனித்துவமான அஞ்சலி செலுத்துவது போன்று போஸ் கொடுத்தார். இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

SA vs IND: சுத்து போட்ட டீம் இந்தியா, சிறப்பான சம்பவம் செய்த சிராஜ் – 55 ரன்களுக்கு காலியான தென் ஆப்பிரிக்கா!

மேலும், இந்தப் போட்டியில் மார்கோ ஜான்சனின் விக்கெட்டை கைப்பற்றுவதற்கு விராட் கோலி ஐடியாவும் கொடுத்துள்ளார். அவர் சொன்னது போன்று பந்து வீசிய முகமது சிராஜ், ஜான்சனின் விக்கெட்டை கைப்பற்றியுள்ளார். இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

SA vs IND 2nd Test: தென் ஆப்பிரிக்காவிற்கு எதிரான 2ஆவது டெஸ்ட் – 5 விக்கெட் கைப்பற்றி முகமது சிராஜ் சாதனை!

Scroll to load tweet…

Scroll to load tweet…