SA vs IND 2nd Test: தென் ஆப்பிரிக்காவிற்கு எதிரான 2ஆவது டெஸ்ட் – 5 விக்கெட் கைப்பற்றி முகமது சிராஜ் சாதனை!

தென் ஆப்பிரிக்கா அணிக்கு எதிரான 2ஆவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர் முகமது சிராஜ் 5 விக்கெட்டுகள் கைப்பற்றி சாதனை படைத்துள்ளார்.

Mohammed Siraj took 5 wickets against South Africa for the first time in the 2nd Test against SA in Cape Town rsk

இந்தியா மற்றும் தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான 2ஆவது டெஸ்ட் போட்டி தற்போது கேப்டவுனில் நடந்து வருகிறது. இதில், டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்கா கேப்டன் டீன் எல்கர் பேட்டிங் தேர்வு செய்தார். ஏற்கனவே முதல் டெஸ்ட் போட்டியில் 32 ரன்கள் மற்றும் இன்னிங்ஸ் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற தைரியத்தோடு 2ஆவது போட்டியில் தென் ஆப்பிரிக்கா பேட்டிங் தேர்வு செய்தது.

SA vs IND 2nd Test: திருப்பி கொடுக்கும் டீம் இந்தியா – ரோகித் பிளான்படி பவுலிங் போட்டு விக்கெட் எடுத்த பும்ரா!

இந்தப் போட்டியில், தென் ஆப்பிரிக்கா அணியில் சில மாற்றங்கள் செய்யப்பட்டது. அதன்படி, ஜெரால்டு கோட்ஸி, டெம்பா பவுமா ஆகியோர் இடம் பெறவில்லை. அவர்களுக்கு பதிலாக லுங்கி நிகிடி, டிரிஸ்டன் ஸ்டப்ஸ் மற்றும் கேசவ் மகாராஜ் ஆகியோர் அணியில் சேர்க்கப்பட்டனர். இதே போன்று கட்டாய வெற்றியை நோக்கி களமிறங்கிய இந்திய அணியிலும் சில மாற்றங்கள் செய்யப்பட்டது. அதன்படி, ரவிச்சந்திரன் அஸ்வின் மற்றும் ஷர்துல் தாக்கூர் ஆகியோர் நீக்கப்பட்டு அவர்களுக்கு பதிலாக ரவீந்திர ஜடேஜா மற்றும் முகேஷ் குமார் இருவரும் அணியில் இடம் பெற்றனர்.

ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன்  Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.

Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D

இதையடுத்து எய்டன் மார்க்ரம் மற்றும் டீன் எல்கர் இருவரும் களமிறங்கினர். இதில், முகமது சிராஜ் வீசிய 3.2 ஆவது ஓவரில் மார்க்ரம் 2 ரன்களில் ஸ்லிப்பில் நின்றிருந்த யஷஸ்வி ஜெய்ஸ்வாலிடம் கொடுத்து ஆட்டமிழந்தார். அதன் பிறகு டோனி டி ஜோர்ஸி களமிறங்கினார். முதல் போட்டியில் 185 ரன்கள் வரையில் குவித்த டீன் எல்கர் இந்தப் போட்டியில் சிராஜ் பந்தில் 4 ரன்கள் எடுத்த நிலையில் கிளீன் போல்டானார்.

IPL 2024 Fittest Players List: 2024ல் ஐபிஎல் தொடரில் ஃபிட்டான வீரர்கள் யார் யார்?

இவரைத் தொடர்ந்து, வந்த அறிமுக வீரர் டிரிஸ்டன் ஸ்டப்ஸ் 3 ரன்களில் ஜஸ்ப்ரித் பும்ரா பந்தில் கிளீன் போல்டானார். பும்ரா வீசிய முந்தைய புல்டாஸ் பந்தைய ஸ்டப்ஸ் எதிர்கொண்டார். அப்போது இந்திய வீரர்கள் அப்பீல் கேட்க, நடுவர் அவுட் கொடுக்க மறுத்தார். எனினும், இந்திய வீரர்கள் ரெவியூ எடுக்கவில்லை. அல்ட்ராஎட்ஜில் பந்து பேட்டில் பட்டது தெரியவந்தது. அப்போது ரோகித் சர்மா பந்தை இப்படி போடு அடிக்கட்டும் என்று அறிவுரை வழங்க, அடுத்த பந்திலேயே ரோகித் சர்மாவிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். ரோகித் சர்மா ஹெல்மெட் அணிந்து கொண்டு ஷார்ட் லெக் திசையில் பீல்டிங் செய்து கொண்டிருந்தார்.

இவரைத் தொடர்ந்து டோனி டி ஜோர்ஸி 2 ரன்களில் சிராஜ் பந்தில் விக்கெட் கீப்பரிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். அதன் பிறகு வந்த டேவிட் பெடிங்காம் 12 ரன்களில் சிராஜ் பந்தில் ஆட்டமிழந்தார். அடுத்ததாக மார்கோ ஜான்செனின் விக்கெட்டை கைப்பற்றி டெஸ்ட் கிரிக்கெட்டில் 5 விக்கெட்டுகள் கைப்பற்றி சாதனை படைத்தார்.

மண்டியிட்டு கையில் ரிங் வைத்துக் கொண்டு தோழிக்கு லவ் புரபோஸ் செய்த இந்திய ரசிகர் – வைரலாகும் வீடியோ!

தென் ஆப்பிரிக்கா அணிக்கு எதிராக முதல் முறையாக சிராஜ் 5 விக்கெட்டுகள் கைப்பற்றி சாதனை படைத்துள்ளார். ஆனால், ஒட்டு மொத்தமாக டெஸ்ட் கிரிக்கெட்டில் 5ஆவது முறையாக 5 விக்கெட்டுகள் கைப்பற்றியுள்ளார். அடுத்து, விக்கெட் கீப்பர் கைல் வெர்ரேனேயின் விக்கெட் கைப்பற்றி டெஸ்ட் கிரிக்கெட்டில் தனது 6ஆவது விக்கெட்டை எடுத்தார். தற்போது வரையில் தென் ஆப்பிரிக்கா 7 விக்கெட்டுகளை இழந்து 46 ரன்கள் குவித்து விளையாடி வருகிறது.

 

 

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios