மண்டியிட்டு கையில் ரிங் வைத்துக் கொண்டு தோழிக்கு லவ் புரபோஸ் செய்த இந்திய ரசிகர் – வைரலாகும் வீடியோ!

ஆஸ்திரேலியாவில் நடந்து பிக்பாஷ் டி20 போட்டியின் போது இந்திய ரசிகர் ஒருவர் தனது தோழிக்கு லவ் புரபோஸ் செய்த வீடியோ ஒன்று  சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

Indian Fan Love Proposes to his Girl Friend During Melbourne Renegades vs Melbourne Stars in Big Bash League 2024 rsk

ஒவ்வொரு ஆண்டும் ஆஸ்திரேலியாவின் பிக்பாஷ் டி20 லீக் தொடர் நடத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில் இந்த ஆண்டிற்கான 13ஆவது சீசன் கடந்த ஆண்டு டிசம்பர் 7 ஆம் தேதி தொடங்கியது. இதில், அடிலெய்டு ஸ்டிரைக்கர்ஸ், மெல்போர்ன் ஸ்டார்ஸ், பெர்த் ஸ்கார்ச்சர்ஸ், ஹோபர்ட் ஹரிகேன்ஸ், பிரிஸ்பேன் ஹீட், சிட்னி சிக்ஸர்ஸ், சிட்னி தண்டர்ஸ், மெல்போர்ன் ரெனிகேட்ஸ் என்று 8 அணிகள் இடம் பெற்று விளையாடி வருகின்றனர்.

கடைசி டெஸ்ட் போட்டி – 2 மகள்களுடன் தேசிய கீதம் பாட வந்த டேவிட் வார்னர்!

இந்த நிலையில் தான், நேற்று கிளேன் மேக்ஸ்வெல் தலைமையிலான மெல்போர்ன் ஸ்டார்ஸ் மற்றும் வில் சதர்லேண்ட் தலைமையிலான மெல்போர்ன் ரெனிகேட்ஸ் அணிக்கும் இடையிலான 23ஆவது போட்டி நடந்தது. இந்தப் போட்டியைப் பார்ப்பதற்கு இந்திய ரசிகர் ஒருவர் தனது தோழியுடன் மைதானத்திற்கு சென்றிருந்தார்.

Hardik Pandya Gym Video: வெறித்தனமாக ஒர்க் அவுட் செய்யும் ஹர்திக் பாண்டியா – வைரலாகும் வீடியோ!

நேர்காணல் செய்பவர் போட்டியின் நடுப்பகுதியில் ரசிகர்களிடம் பேசிக்கொண்டு ஸ்டாண்ட் வழியாக நடந்துகொண்டிருந்தார். அப்போது ஒரு இளம் ஜோடி ரெனிகேட்ஸ் மற்றும் ஸ்டார்ஸ் என்று வெவ்வேறு அணிகளின் ரசிகர்களாக விளையாட்டை பார்த்துக் கொண்டிருந்தனர். அவர்களிடம் போட்டி அணிகளை ஆதரிப்பது அவரது உறவில் ஏதேனும் பதற்றத்தை ஏற்படுத்தியதா என்று நேர்காணல் செய்பவர் அவர்களிடம் கேள்வி எழுப்பினார். கேட்டார். அதற்கு அந்த ரசிகர், "ஆமாம், நான் ஒரு பெரிய ஸ்டார்ஸ் ரசிகன், அவள் ஒரு ரெனிகேட்ஸ் ரசிகை. ஆனால் அவள் (கிளென்) மேக்ஸ்வெல்லையும் நேசிக்கிறாள், நானும் ஒரு மேக்ஸ்வெல் ரசிகன், அதனால் அவளை இங்கு அழைத்து வந்தேன்" என்று பதிலளித்தார்.

IPL 2024 Fittest Players List: 2024ல் ஐபிஎல் தொடரில் ஃபிட்டான வீரர்கள் யார் யார்?

அதன் பிறகு தோழி அதிர்ச்சியுடன் பார்க்கும் போது தோழிக்கு முன்பாக மண்டியிட்டு, தான் வைத்திருந்த ஒரு மோதிரத்தை எடுத்து, தோழிக்கு காதலை தனது வெளிப்படுத்தி அந்த மோதிரத்தை அணிவித்தார். அங்கு கூடியிருந்த ரசிகர்கள் அனைவருமே ஆரவாரம் செய்தனர். பேட்டி எடுப்பவரும் அவர்களை மனதார பாராட்டி, தனது வாழ்த்துக்களை தெரியப்படுத்தினார்.

ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன்  Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.

Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D

இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இந்தப் போட்டியில் முதலில் விளையாடிய மெல்போர்ன் ரெனிகேட்ஸ் 14 ஓவர்களில் 7 விக்கெட்டுகளை இழந்து 97 ரன்கள் குவித்தது. பின்னர் விளையாடிய மெல்போர்ன் ஸ்டார்ஸ் 12.1 ஓவர்களில் 2 விக்கெட்டுகளை இழந்து 101 ரன்கள் குவித்து 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. மழையின் காரணமாக ஓவர்கள் குறைக்கப்பட்டு இரு அணிகளும் 14 ஓவர்கள் கொண்ட போட்டியில் விளையாடின என்பது குறிப்பிடத்தக்கது.

 

 

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios