Asianet News TamilAsianet News Tamil

Jasprit Bumrah: டெஸ்ட் கிரிக்கெட்டில் தனித்துவமான சாதனையை படைத்த பும்ரா.. தரமான சம்பவம்

டெஸ்ட் கிரிக்கெட்டில் இந்திய அணியின் ஃபாஸ்ட் பவுலர் ஜஸ்ப்ரித் பும்ரா தனித்துவமான சாதனையை படைத்துள்ளார்.
 

jasprit bumrah scripted unique record in test cricket
Author
Centurion, First Published Dec 30, 2021, 6:53 PM IST

இந்தியா - தென்னாப்பிரிக்கா இடையேயான 3 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரின் முதல் டெஸ்ட் கடந்த 26ம் தேதி தொடங்கி நடந்தது. செஞ்சூரியனில் நடந்த இந்த போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் ஆடிய இந்திய அணி முதல் இன்னிங்ஸில் 327 ரன்கள் அடித்தது. தென்னாப்பிரிக்க அணி முதல் இன்னிங்ஸில் 197 ரன்கள் மட்டுமே அடித்தது. 

130 ரன்கள் முன்னிலையுடன் 2வது இன்னிங்ஸை ஆடிய இந்திய அணி 174 ரன்கள் அடிக்க, 305 ரன்கள் என்ற இலக்கை விரட்டிய தென்னாப்பிரிக்க அணி வெறும் 191 ரன்களுக்கு சுருண்டு 113 ரன்கள் வித்தியாசத்தில் படுதோல்வி அடைந்தது. இந்த போட்டியில் வெற்றி பெற்ற இந்திய அணி 1-0 என டெஸ்ட் தொடரில் முன்னிலை வகிக்கிறது.

இந்திய அணியின் ஃபாஸ்ட் பவுலிங் சிறப்பாக இருந்ததால் தான், இந்திய அணியால் தென்னாப்பிரிக்காவை அதன் சொந்த மண்ணில் வீழ்த்த முடிந்தது. அதுவும் தென்னாப்பிரிக்க அணியின்  கோட்டையான செஞ்சூரியனில் அந்த அணியை வீழ்த்திய முதல் ஆசிய அணி என்ற சாதனையை படைத்தது இந்திய அணி.

இந்த போட்டியில் இந்திய அணி சார்பில் ஷமி அபாரமாக பந்துவீசி அதிகபட்சமாக 8 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார். பும்ரா 2 இன்னிங்ஸ்களிலும் தலா 2 விக்கெட்டுகள் என மொத்தமாக 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

இந்த 4 விக்கெட்டுகளுடன் சேர்த்து மொத்தமாக டெஸ்ட் கிரிக்கெட்டில் 105 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார் பும்ரா. இந்த 105ல் 101 விக்கெட்டுகளை பும்ரா வெளிநாடுகளில் வீழ்த்தியுள்ளார். இதன்மூலம் ஒரு தனித்துவமான சாதனையை படைத்துள்ளார் பும்ரா.

அதாவது குறைவான டெஸ்ட் விக்கெட்டுகளில் வெளிநாடுகளில் 100 விக்கெட்டுகளை வீழ்த்திய பவுலர் என்ற சாதனையை படைத்துள்ளார் பும்ரா. பும்ரா வீழ்த்திய அவரது 104வது டெஸ்ட் விக்கெட் வெளிநாட்டில் அவரது 100வது டெஸ்ட் விக்கெட். இதுதான் மிகக்குறைந்த விக்கெட்டில் வெளிநாடுகளில் 100 விக்கெட் வீழ்த்திய சாதனை. இதற்கு முன்பாக பாகிஸ்தான் ஃபாஸ்ட் பவுலர் முகமது ஆமீர் 118 டெஸ்ட் விக்கெட்டுகளை வீழ்த்தியிருந்தபோது வெளிநாட்டில் 100 விக்கெட் என்ற மைல்கல்லை எட்டியிருந்தார். அந்த சாதனையை பும்ரா முறியடித்துள்ளார்.
 

Follow Us:
Download App:
  • android
  • ios