Jasprit Bumrah: பும்ராவிற்கு ஓய்வு அளித்த பிசிசிஐ – கேஎல் ராகுலும் இன்னும் குணமாகவில்லை!

இங்கிலாந்துக்கு எதிரான 4ஆவது டெஸ்ட் போட்டியிலிருந்து ஜஸ்ப்ரித் பும்ரா மற்றும் கேஎல் ராகுல் இருவரையும் பிசிசிஐ அதிரடியாக நீக்கியுள்ளது.

Jasprit Bumrah released from 4th Test and Mukesh Kumar Join the test squad rsk

இந்தியா வந்த இங்கிலாந்து 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இதில், 2 போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்று 2-1 என்று முன்னிலையில் உள்ளது. விராட் கோலி இந்த தொடரிலிருந்து வெளியேறிய நிலையில், கேஎல் ராகுலும் ஒரு டெஸ்ட் போட்டிக்கு பிறகு ஓய்வில் இருக்கிறார்.

கடந்த சில தினங்களுக்கு முன்பு நடந்த 3ஆவது டெஸ்ட் போட்டியில் கேஎல் ராகுல் இடம் பெறாத நிலையில் அவர் இன்னும் உடற் தகுதி பெறாத நிலையில் 4ஆவது டெஸ்ட் போட்டியிலும் இடம் பெற மாட்டார் என்று பிசிசிஐ அறிவித்துள்ளது. இந்த நிலையில் தான் இந்திய அணியின் துணை கேப்டனான ஜஸ்ப்ரித் பும்ரா 4ஆவது டெஸ்ட் போட்டியின் போது ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது என்று பிசிசிஐ அறிவித்துள்ளது. அவருக்குப் பதிலாக முகேஷ் குமார் அணியில் இடம் பெறுவார் என்று பிசிசிஐ அறிவித்துள்ளது.

இந்திய அணி:

ரோகித் சர்மா (கேப்டன்), யஷஸ்வி ஜெய்ஸ்வால், சுப்மன் கில், ரஜத் படிதார், சர்ஃபராஸ் கான், துருவ் ஜூரெல் (விக்கெட் கீப்பர்), கேஎஸ் பரத் (விக்கெட் கீப்பர்), தேவ்தத் படிக்கல், ரவிச்சந்திரன் அஸ்வின், ரவீந்திர ஜடேஜா, அக்‌ஷர் படேல், வாஷிங்டன் சுந்தர், குல்தீப் யாதவ், முகமது சிராஜ், முகேஷ் குமார், ஆகாஷ் தீப்.

 

 

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios