இங்கிலாந்துக்கு எதிரான எட்ஜ்பாஸ்டன் டெஸ்ட்டில் பும்ரா ஓரே ஓவரில் 29 ரன்களை குவிக்க, அந்த ஓவரில் எக்ஸ்ட்ராஸுடன் சேர்த்து இந்தியாவிற்கு 35 ரன்கள் கிடைத்தது. டெஸ்ட் கிரிக்கெட்டில் ஒரு ஓவரில் அடிக்கப்பட்ட அதிகபட்ச ஸ்கோர் இதுதான். 

இந்தியா - இங்கிலாந்து இடையேயான எட்ஜ்பாஸ்டன் டெஸ்ட்டில் டாஸ் வென்ற இங்கிலாந்து கேப்டன் பென் ஸ்டோக்ஸ் ஃபீல்டிங்கை தேர்வு செய்தது.

முதலில் பேட்டிங் ஆடிய இந்திய அணி, 98 ரன்களுக்கு ஷுப்மன் கில், புஜாரா, கோலி, விஹாரி, ஷ்ரேயாஸ் ஐயர் ஆகிய 5 விக்கெட்டுகளை இழந்துவிட்டது. அதன்பின்னர் ரிஷப் பண்ட்டும் ஜடேஜாவும் இணைந்து அபாரமாக பேட்டிங் ஆடி 6வது விக்கெட்டுக்கு 222 ரன்களை குவித்தனர். 

இதையும் படிங்க - ராகுல் டிராவிட்டா இப்படி? ரிஷப் பண்ட்டின் சதத்தை விட பரபரப்பா பேசப்படும் டிராவிட்டின் கொண்டாட்டம்!வைரல் வீடியோ

89 பந்தில் சதமடித்த ரிஷப் பண்ட் 111 பந்தில் 146 ரன்களை குவித்தார். அவரைத்தொடர்ந்து ஜடேஜாவும் சதமடித்தார். 104 ரன்களுக்கு ஜடேஜா ஆட்டமிழக்க, 375 ரன்களுக்கு இந்திய அணி 9 விக்கெட்டுகளை இழந்தது. ஆனால் அதன்பின்னரும், பும்ராவின் அதிரடியால் இந்திய அணிக்கு 41 ரன்கள் கிடைத்தது.

ஸ்டூவர்ட் பிராட் வீசிய இன்னிங்ஸின் 84வது ஓவரில் பும்ரா 4 பவுண்டரிகள் மற்றும் 2 சிக்ஸர்களுடன் 29 ரன்களை விளாசினார். அதுபோக, 6 எக்ஸ்ட்ராஸும் கிடைத்தது. ஆக மொத்தம் அந்த ஓவரில் இந்திய அணிக்கு 35 ரன்கள் கிடைத்தது.

இதையும் படிங்க - தோனிக்கு ஒரு பைக் கொடுத்தோம்; பைக்கை கொடுத்த அடுத்த செகண்ட் தோனியை காணும்! ஸ்ரீநிவாசன் பகிர்ந்த சுவாரஸ்ய தகவல்

டெஸ்ட் கிரிக்கெட்டில் ஒரு ஓவரில் ஒரு அணி அடித்த அதிகபட்ச ஸ்கோர் இந்த 35 ரன்கள் தான். தனிப்பட்ட வீரரை பொறுத்தமட்டில் பும்ரா இந்த ஓவரில் அடித்த 29 ரன்கள் தான் ஒரு ஓவரில் ஒரு வீரர் அடித்த அதிகபட்ச ஸ்கோர். 

Scroll to load tweet…

இதற்கு முன் ஒரே ஓவரில் பிரயன் லாரா, ஜார்ஜ் பெய்லி மற்றும் கேஷவ் மஹராஜ் ஆகிய மூவரும் தலா 28 ரன்கள் அடித்துள்ளனர். அந்த சாதனையை பும்ரா முறியடித்துள்ளார்.