IND vs AUS: விராட் கோலி களத்திற்கு வந்ததும் இதை செய்யுங்க..! பாட் கம்மின்ஸுக்கு கில்லெஸ்பி முரட்டு ஆலோசனை

இந்தியா - ஆஸ்திரேலியா இடையேயான டெஸ்ட் தொடரில் விராட் கோலி களத்திற்கு வந்ததும் ஆஸ்திரேலிய அணி என்ன செய்ய வேண்டும் என்று ஆஸி., முன்னாள் ஃபாஸ்ட் பவுலர் ஜேசன் கில்லெஸ்பி ஆலோசனை கூறியுள்ளார்.
 

jason gillespie advice to pat cummins that what australia team should do when virat kohli comes to bat in india vs australia test series

இந்தியா - நியூசிலாந்து இடையேயான ஒருநாள் தொடர் முடிந்துவிட்ட நிலையில், அடுத்ததாக டி20 தொடர் நடக்கிறது. இன்று முதல் டி20 போட்டி நடக்கிறது. இந்த டி20 தொடர் முடிந்த பின், இந்தியா - ஆஸ்திரேலியா இடையேயான டெஸ்ட் தொடர் நடக்கிறது.

இந்தியா - ஆஸ்திரேலியா இடையேயான 4 டெஸ்ட் போட்டிகள் கொண்ட பார்டர் - கவாஸ்கர் டிராபி மீது மிகுந்த எதிர்பார்ப்பு நிலவுகிறது. நாக்பூர், டெல்லி, தர்மசாலா மற்றும் அகமதாபாத் ஆகிய நகரங்களில் 4 டெஸ்ட் போட்டிகள் நடக்கின்றன.

Womens U19 T20 World Cup: அரையிறுதியில் நியூசிலாந்தை அசால்ட்டா அடித்து வீழ்த்தி ஃபைனலுக்கு முன்னேறியது இந்தியா

இந்த டெஸ்ட் தொடர் ஐசிசி டெஸ்ட் சாம்பியன்ஷிப்புக்கானது. மேலும், இந்த தொடர் தான் டெஸ்ட் சாம்பியன்ஷிப் ஃபைனலிஸ்ட்டை தீர்மானிக்கும் தொடருமாகும். டெஸ்ட் சாம்பியன்ஷிப் ஃபைனலில் புள்ளி பட்டியலில் முதலிரண்டு இடங்களில் இருக்கும் அணிகள் மோதும். இப்போதைக்கு 75.56 சதவிகிதத்துடன் புள்ளி பட்டியலில் முதலிடத்தில் வலுவாக இருக்கும் ஆஸ்திரேலிய அணி ஃபைனலுக்கு முன்னேறுவது உறுதி.

58.93 சதவிகிதத்துடன் 2ம் இடத்தில் இருக்கும் இந்திய அணி, அந்த இடத்தை வலுவாக தக்கவைத்து ஃபைனலுக்கு முன்னேற வேண்டுமானால், ஆஸ்திரேலியாவிற்கு எதிரான தொடரை 2-0 அல்லது 3-0 அல்லது 2-1 அல்லது 3-1 என வெல்ல வேண்டும். எனவே இந்த தொடர் கடும் போட்டியாக இருக்கும். கடைசி 2 முறை ஆஸ்திரேலியாவிற்கு சுற்றுப்பயணம் செய்த இந்திய அணி ஆஸி., மண்ணில் அந்த அணியை வீழ்த்தி டெஸ்ட் தொடர்களை வென்றது. எனவே அதற்கு இந்திய மண்ணில் இந்திய அணியை வீழ்த்தி பழிதீர்க்கும் முனைப்பில் உள்ளது ஆஸ்திரேலிய அணி.

இந்த தொடரில் சில வீரர்களுக்கு இடையேயான போட்டி மிகப்பெரிய அளவில் எதிர்பார்க்கப்படுகிறது. அஷ்வின் - லபுஷேன், ஹேசில்வுட் - ரோஹித் சர்மா, கேமரூன் க்ரீன் - சூர்யகுமார் யாதவ், நேதன் லயன் - புஜாரா ஆகியோருக்கு இடையேயான போட்டி சுவாரஸ்யமாக இருக்கும்.

இதில் உச்சபட்சமான மோதல் என்றால் அது, கோலி - கம்மின்ஸுக்கு இடையேயானதுதான். தலைசிறந்த பேட்ஸ்மேன் மற்றும் சிறந்த பவுலருக்கு இடையேயான போட்டி எல்லா காலக்கட்டத்திலுமே மிகுந்த எதிர்பார்ப்புக்குள்ளாகும். அந்தவகையில், இந்தியா - ஆஸ்திரேலியா டெஸ்ட் தொடரில் கோலி - கம்மின்ஸ் மோதல் எதிர்பார்க்கப்படுகிறது.

பாட் கம்மின்ஸின் பவுலிங்கை 94 ஸ்டிரைக் ரேட்டில் அடித்து அசத்தலாக ஆடியிருக்கிறார் கோலி. ஆனால் அதேவேளையில், கோலியை 9 முறை வீழ்த்தி கோலிக்கு எதிராக நல்ல ரெக்கார்டை வைத்திருக்கிறார் கம்மின்ஸ். எனவே இவர்களுக்கு இடையேயான மோதல் கடுமையாக இருக்கும்.

விராட் கோலி செம ஃபார்மில் அபாரமாக ஆடி சதங்களாக விளாசி, மீண்டும் தனது டிரேட்மார்க் இன்னிங்ஸ்களை ஆடிவரும் நிலையில், ஆஸ்திரேலிய அணி அவரை இந்த டெஸ்ட் தொடரில் நிலைக்கவிட்டால் அது அந்த அணிக்கு பெரிய பாதிப்பாக அமையும். எனவே முடிந்தவரை கோலியை விரைவில் வீழ்த்த ஆஸ்திரேலிய அணி முயல வேண்டும். அந்தவகையில், கோலியை விரைவில் வீழ்த்த ஆஸ்திரேலிய முன்னாள் ஃபாஸ்ட் பவுலர் ஜேசன் கில்லெஸ்பி ஆலோசனை வழங்கியுள்ளார்.

டெஸ்ட் அணியில் சர்ஃபராஸ் கானை எடுக்காதது ஏன்..? இந்திய அணி தேர்வாளர் விளக்கம்

இதுகுறித்து பேசிய ஜேசன் கில்லெஸ்பி, விராட் கோலி - கம்மின்ஸ் இடையேயான மோதலை பார்க்கத்தான் ஆர்வமாக இருக்கிறேன். அது மிகச்சிறந்த மோதலாக இருக்கும். விராட் கோலி பேட்டிங் ஆட வந்தவுடன், எதை பற்றியும் யோசிக்காமல் கம்மின்ஸ் நேரடியாக பந்துவீச வந்துவிட வேண்டும். டாப் கேமில் இந்த 2 சிறந்த கிரிக்கெட் வீரர்களும் மோதுவதை பார்க்க சுவாரஸ்யமாக இருக்கும் என்றார் கில்லெஸ்பி.
 

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios