ஒர்க் அவுட் செய்யும் புகைப்படத்தை பகிர்ந்திருந்த மயன்க் அகர்வாலை மரண கலாய் கலாய்த்துள்ளார் நியூசிலாந்து ஆல்ரவுண்டர் ஜிம்மி நீஷம். 

இந்தியா இங்கிலாந்து இடையேயான 4 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரின் 3 போட்டிகள் முடிந்துள்ள நிலையில், கடைசி டெஸ்ட் வரும் 4ம் தேதி அகமதாபாத்தில் தொடங்குகிறது. அதன்பின்னர் 5 டி20 மற்றும் 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடர் நடக்கவுள்ளது.

எனவே அனைத்து வீரர்களுமே தீவிர பயிற்சியில் ஈடுபட்டுவருகின்றனர். தற்போதைய இந்திய அணியில் ஃபிட்னெஸுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்படுவதால், அனைத்து வீரர்களும் ஃபிட்னெஸிலும் அதிக கவனம் செலுத்துகின்றனர்.

பொதுவாக வீரர்கள் உடற்பயிற்சி செய்யும் மற்றும் வலைப்பயிற்சி செய்யும் புகைப்படங்கள், வீடியோக்களை வீரர்கள் சமூக வலைதளங்களில் பதிவிடுவார்கள். அந்தவகையில், மயன்க் அகர்வால் தான் உடற்பயிற்சி செய்யும் புகைப்படத்தை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்து, தினமும் போடப்படும் கடின உழைப்பின் மூலமே மாற்றங்களை உணரமுடியும் என்று பதிவிட்டிருந்தார்.

View post on Instagram

அதற்கு, “வாழ்த்துக்கள்.. ஆண் குழந்தையா, பெண் குழந்தையா” என்று கிண்டலாக ரியாக்ட் செய்துள்ளார் நியூசிலாந்து ஆல்ரவுண்டர் ஜிம்மி நீஷம். உண்மையாகவே செம டைமிங் ரியாக்‌ஷன்.. இவர்கள் இருவரும் கடந்த ஐபிஎல் சீசனில் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியில் இணைந்து ஆடியவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.