Asianet News TamilAsianet News Tamil

#ENGvsIND 39 வயதில் ரத்தம் சொட்டச்சொட்ட விளையாடிய ஆண்டர்சன்..! வியக்கவைக்கும் ஆண்டர்சனின் அர்ப்பணிப்பு

இந்தியா - இங்கிலாந்து இடையேயான 4வது டெஸ்ட்டில் இங்கிலாந்து அணியின் 39 வயதான சீனியர் ஃபாஸ்ட் பவுலர் ஜேம்ஸ் ஆண்டர்சன் காலில் ரத்தம் சொட்டச்சொட்ட பந்துவீசிய சம்பவம், அவரது அர்ப்பணிப்பை கண்டு வியக்கவைக்கிறது.
 

james anderson bowling even bleeding on his leg in england vs india fourth test
Author
Oval, First Published Sep 2, 2021, 10:36 PM IST

இந்தியா - இங்கிலாந்து இடையேயான 4வது டெஸ்ட் போட்டி லண்டன் ஓவல் மைதானத்தில் நடந்துவருகிறது. டாஸ் வென்ற இங்கிலாந்து அணி ஃபீல்டிங்கை தேர்வு செய்ய, இந்திய அணி முதலில் பேட்டிங் ஆடியது.

இந்திய அணியின் தொடக்க வீரர்கள் ரோஹித்(11), ராகுல்(17) ஆகிய இருவரும் சொற்ப ரன்களில் ஆட்டமிழக்க, அதன்பின்னர் புஜாரா(4), ஜடேஜா(10) ஆகிய இருவரும் சொதப்பினர். சிறப்பாக ஆடி அரைசதம் அடித்த கேப்டன் கோலி, 50 ரன்னில் நடையை கட்ட, அவரைத்தொடர்ந்து ரஹானே 14 ரன்னிலும் ரிஷப் பண்ட் 9 ரன்னிலும் ஆட்டமிழந்தனர். 

பின்வரிசையில் இறங்கிய ஷர்துல் தாகூர் அடித்து ஆடி 31 பந்தில் அரைசதம் அடித்தார். அதிரடியாக ஆடிய ஷர்துல் தாகூர் 36 பந்தில் 57 ரன்களை விளாசி ஆட்டமிழக்க, அதன்பின்னர் டெயிலெண்டர்கள் அடுத்தடுத்து ஆட்டமிழக்க, முதல் இன்னிங்ஸில் 191 ரன்களுக்கு சுருண்டது இந்திய அணி. 

இதைத்தொடர்ந்து முதல் இன்னிங்ஸை தொடங்கிய இங்கிலாந்து அணியின் தொடக்க வீரர்கள் ரோரி பர்ன்ஸ்(5) மற்றும் ஹசீப் ஹமீத்(0) ஆகிய இருவரையும் இன்னிங்ஸின் 4வது ஓவரிலேயே வீழ்த்தினார் பும்ரா. இதையடுத்து ரூட்டும் டேவிட் மலானும் இணைந்து ஆடிவருகின்றனர்.

இந்த தொடரில் இங்கிலாந்து அணியின் சீனியர் ஃபாஸ்ட் பவுலரான 39 வயது ஜேம்ஸ் ஆண்டர்சன் அருமையாக பந்துவீசி, இந்த வயதிலும் விக்கெட்டுகளை வீழ்த்தி இங்கிலாந்து அணியின் வெற்றிகளில் முக்கிய பங்காற்றுகிறார். 39 வயது வரை ஒரு ஃபாஸ்ட் பவுலர் ஆடுவது என்பதே அரிதானது. அதிலும் சிறப்பாக ஆடி இன்னும் மேட்ச் வின்னராக திகழ்கிறார் ஆண்டர்சன்.

இந்தியாவுக்கு எதிரான முதல் 3 டெஸ்ட் போட்டிகளிலும் அருமையாக பந்துவீசினார். லண்டன் ஓவலில் நடந்துவரும் 4வது டெஸ்ட்டிலும் புஜாராவின் விக்கெட்டை ஆண்டர்சன் தான் வீழ்த்தினார். இந்த போட்டியில் ஆண்டர்சன் அவரது 3வது ஸ்பெல்லை வீசும்போது, இன்னிங்ஸின் 42வது ஓவரை வீசும்போது அவரது பேண்ட்டில் ரத்தம் இருந்தது கேமராவில் பதிவானது. ஃபீல்டிங் செய்யும்போது ஏற்பட்ட காயத்தால் அவரது காலில் ரத்தம் வழிந்திருக்கிறது. ஆனாலும் அதையெல்லாம் பொருட்படுத்தாமல் ரத்தம் சொட்டச்சொட்ட ஆண்டர்சன் பந்துவீசிய சம்பவம் ரசிகர்கள் மத்தியில் அவரது அர்ப்பணிப்பை நினைத்து வியக்கவைத்திருக்கிறது.
 

Follow Us:
Download App:
  • android
  • ios