நியூசிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 10 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் தோல்வியடைந்த நிலையில், இரண்டாவது போட்டியில் வெற்றி முனைப்பில் உள்ளது. இந்நிலையில், இஷாந்த் சர்மா விலகியிருப்பது இந்திய அணிக்கு பெரும் பின்னடைவு.

முதல் போட்டியில் நன்றாக ஆடியதே மயன்க் அகர்வாலும் இஷாந்த் சர்மாவும் தான். அந்த போட்டியில் சிறப்பாக வீசி 5 விக்கெட்டுகளை வீழ்த்தியிருந்தார். இந்நிலையில், அவர் காயத்தால் விலகியுள்ளார். 

ரஞ்சி போட்டியில் ஆடியபோது இஷாந்த் சர்மாவிற்கு கணுக்காலில் காயம் ஏற்பட்டது. அதற்காக அவர் சிகிச்சை பெற்று ஓய்வில் இருந்த அவர், நியூசிலாந்துக்கு எதிரான டெஸ்ட் போட்டிக்கு முன், முழு உடற்தகுதியை பெற்று அணிக்கு திரும்பினார். முதல் போட்டியில் நன்றாக பந்துவீசி 5 விக்கெட்டுகளையும் வீழ்த்தி கொடுத்தார்.

இந்நிலையில், அதே கணுக்காலில் மீண்டும் காயம் ஏற்பட்டிருப்பதால், நாளை தொடங்கவுள்ள இரண்டாவது போட்டியிலிருந்து அவர் விலகியுள்ளார். எனவே அவருக்கு பதிலாக, மற்றொரு அனுபவ ஃபாஸ்ட் பவுலரான உமேஷ் யாதவ் அணியில் இணைவார் என எதிர்பார்க்கப்படுகிறது. உமேஷ் யாதவும் நவ்தீப் சைனியும் ரிசர்வ் ஃபாஸ்ட் பவுலர்களாக உள்ளனர். இவர்களில் நவ்தீப் சைனின் அனுபவமற்றவர். உமேஷ் யாதவ் தான் அணியில் இணைவார்.