இஷாந்த் சர்மா இந்திய அணியின் ஃபாஸ்ட் பவுலிங் யூனிட்டின் தூண். இந்திய அணியின் சீனியர் பவுலரான இஷாந்த் சர்மா, ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளுக்கான அணியில் எடுக்கப்படுவதில்லை. டெஸ்ட் போட்டிகளில் மட்டும் ஆடிவருகிறார். 

இந்திய அணிக்காக அதிக டெஸ்ட் போட்டிகளில் ஆடிய ஃபாஸ்ட் பவுலர் என்ற சாதனைக்கும் பெருமைக்கும் சொந்தக்காரர் இஷாந்த் சர்மா. 2007ம் ஆண்டிலிருந்து இந்திய அணியில் ஆடிவரும் இஷாந்த் சர்மா, இதுவரை 97 டெஸ்ட் போட்டிகளில் ஆடி 297 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். 

இஷாந்த் சர்மா, ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் கேப்டன் ரிக்கி பாண்டிங் மற்றும் சமகால கிரிக்கெட்டின் சிறந்த வீரர்களில் ஒருவரான ஸ்டீவ் ஸ்மித் ஆகிய இருவரையுமே ஸ்லெட்ஜிங் செய்துள்ளார். 2007ல் பெர்த்தில் நடந்த டெஸ்ட் போட்டியில் இரண்டு இன்னிங்ஸ்களிலும் பாண்டிங்கை வீழ்த்தினார் இஷாந்த் சர்மா. பாண்டிங்கை ஸ்லெட்ஜிங்கும் செய்திருக்கிறார் இஷாந்த் சர்மா. அதேபோல 2017ல் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில், சென்னையில் நடந்த டெஸ்ட்டில் ஸ்மித்தை, முகத்தை ஒரு மாதிரியாக வைத்துக்கொண்டு இஷாந்த் செய்த ஸ்லெட்ஜிங் ரொம்ப பிரபலமானது. 

இந்நிலையில், அவர்கள் இருவரில் யாரை ஸ்லெட்ஜிங் செய்ய பிடிக்கும் என்ற கேள்விக்கு, ஸ்மித் என்று சட்டென பதிலளித்துவிட்டார். அந்த கேள்விக்கு பதிலளித்து பேசிய இஷாந்த் சர்மா, பாண்டிங்கை விட ஸ்மித்தை ஸ்லெட்ஜிங் செய்யத்தான் எனக்கு ரொம்ப பிடிக்கும் என்று இஷாந்த் சர்மா பதிலளித்துள்ளார். 

Also Read - ரன்னே ஓட முடியாத அளவுக்கு பெரிய தொப்பை.. திறமையான பேட்ஸ்மேனை விளாசிய அக்தர்

ஸ்லெட்ஜிங் செய்வதில் வல்லவர்கள் ஆஸ்திரேலியர்கள். ஆனால் அவர்களையே ரசித்து ரசித்து ஸ்லெட்ஜிங் செய்துள்ளார் இஷாந்த் சர்மா. அதனால் இருவரில், அவரைவிட எனக்கு இவரை ஸ்லெட்ஜிங் செய்ய பிடிக்கும் என்று தெரிவித்துள்ளார். இதிலேயே தெரிகிறது.. ஸ்லெட்ஜிங்கை எப்படி இஷாந்த் சர்மா ரசித்து செய்கிறார் என்று....