இஷாந்த் சர்மா இந்திய அணியின் ஃபாஸ்ட் பவுலிங் யூனிட்டின் தூண். இந்திய அணியின் சீனியர் பவுலரான இஷாந்த் சர்மா, ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளுக்கான அணியில் எடுக்கப்படுவதில்லை. டெஸ்ட் போட்டிகளில் மட்டும் ஆடிவருகிறார். 

இந்திய அணிக்காக அதிக டெஸ்ட் போட்டிகளில் ஆடிய ஃபாஸ்ட் பவுலர் என்ற சாதனைக்கும் பெருமைக்கும் சொந்தக்காரர் இஷாந்த் சர்மா. 2007ம் ஆண்டிலிருந்து இந்திய அணியில் ஆடிவரும் இஷாந்த் சர்மா, இதுவரை 97 டெஸ்ட் போட்டிகளில் ஆடி 297 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். 

அனில் கும்ப்ளேவின் கேப்டன்சியில் 2007ல் டெஸ்ட் கிரிக்கெட்டில் அறிமுகமான இஷாந்த் சர்மா, தோனியின் கேப்டன்சியில் ஆடினார். தற்போது விராட் கோலியின் கேப்டன்சியிலும் டெஸ்ட் அணியின் நட்சத்திர மற்றும் அனுபவமான பவுலராக ஆடிவருகிறார். 

அறிமுகமான புதிதில் அசத்தலாக வீசி விக்கெட்டுகளை வீழ்த்தி குவித்த இஷாந்த் சர்மா, அதன்பின்னர் பெரியளவில் விக்கெட்டுகளை வீழ்த்தவில்லையென்றாலும், தொடர்ச்சியாக 3-4 விக்கெட்டுகளை வீழ்த்தி அணியில் தனக்கான இடத்தை தக்கவைத்துக்கொண்டே வந்தார். வங்கதேசத்துக்கு எதிராக இந்திய அணி ஆடிய முதல் பகலிரவு டெஸ்ட் போட்டியில், நீண்ட இடைவெளிக்கு பிறகு 5 விக்கெட்டுகளை வீழ்த்தினார். இந்திய அணி பிங்க் நிற பந்தில் ஆடிய முதல் போட்டியிலேயே பிங்க் பந்தில் 5 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார். 

நியூசிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரிலும் இஷாந்த் ஆடினார். ஆனால் இந்த தொடரில் அவர் சோபிக்கவில்லை. அவர் மட்டுமல்ல, யாருமே சோபிக்காததால்தான் இந்திய அணி 2 டெஸ்ட் போட்டிகளிலும் தோற்று ஒயிட்வாஷ் ஆகி தொடரை இழந்தது.

13 ஆண்டுகளாக தொடர்ச்சியாக டெஸ்ட் போட்டிகளிலும் ஆடிவரும் இஷாந்த் சர்மா, தனது கெரியரில் சிறந்த 2 ஸ்பெல்கள் எவை என தெரிவித்துள்ளார். 2007ல் பெர்த் டெஸ்ட்டில் வீசிய ஸ்பெல் மற்றும் 2014ல் லார்ட்ஸ் டெஸ்ட்டில் வீசிய ஸ்பெல் ஆகிய இரண்டையும் இஷாந்த் சர்மா கூறியுள்ளார். 

இந்த இரண்டுமே மிக முக்கியமான பவுலிங் தான். இஷாந்த் சர்மா சிறப்பாக பந்துவீசிய இந்த இரண்டு போட்டிகளிலுமே இந்திய அணி வெற்றி பெற்றது. 2007ல் கும்ப்ளேவின் தலைமையில் இந்திய அணி ஆஸ்திரேலியாவிற்கு சென்று ஆடியபோது, பெர்த்தில் நடந்த மூன்றாவது டெஸ்ட்டில், தொடரை வெல்லும் வாய்ப்பை தக்கவைக்க கண்டிப்பாக வெற்றி பெற்றே தீர வேண்டிய கட்டாயத்தில் இந்திய அணி களமிறங்கியது. அந்த போட்டியின் இரண்டு இன்னிங்ஸ்களிலும் அப்போதைய ஆஸ்திரேலிய கேப்டன் பாண்டிங்கை வீழ்த்தியதுடன் அந்த போட்டியில் அபாரமாக பந்துவீசி இந்திய அணிக்கு வெற்றியை தேடிக்கொடுத்தார். 

Also Read - ரன்னே ஓட முடியாத அளவுக்கு பெரிய தொப்பை.. திறமையான பேட்ஸ்மேனை விளாசிய அக்தர்

அதேபோல 2014ல் லார்ட்ஸ் டெஸ்ட்டில் 319 ரன்கள் என்ற இலக்கை விரட்டிய இங்கிலாந்து அணி, கடைசி நாள் ஆட்டத்தின் உணவு இடைவேளையின்போது, 4 விக்கெட் இழப்பிற்கு 174 ரன்களை அடித்து வெற்றிக்கு அருகில் இருந்தது. அதன்பின்னர் அந்த அணியின் பேட்டிங் ஆர்டரை மளமளவென சரித்து இந்திய அணிக்கு வெற்றியை தேடிக்கொடுத்தார் இஷாந்த் சர்மா. அந்த போட்டியில் 7 விக்கெட்டுகளை வீழ்த்தி இந்திய அணியின் வெற்றிக்கு காரணமாக திகழ்ந்தார். 174 ரன்களுக்கு 4 விக்கெட் என்ற நிலையிலிருந்து, இங்கிலாந்து அணியை223 ரன்களுக்கு ஆல் அவுட் செய்தது இந்தியா. அதற்குக் காரணம் இஷாந்த் சர்மா என்பது குறிப்பிடத்தக்கது. 

ஆனால் தனது கெரியரில் மிக முக்கியமான இந்த இரண்டு ஸ்பெல்களை விட, தற்போது செம ஃபார்மில் அவர் அருமையாக வீசிக்கொண்டிருப்பதாக அவர் நம்புகிறார்.

Also Read - வசமா சிக்கிய சஞ்சய் மஞ்சரேக்கர்.. வச்சு செஞ்ச சிஎஸ்கே.. தக்க தருணத்தில் மூக்கை உடைத்த தரமான சம்பவம்