3 ஒருநாள், 3 டி20, 4 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் ஆடுவதற்காக இந்திய அணி, ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் சென்றுள்ளது. இந்த தொடருக்கான இந்திய அணியில் காயத்தால் அவதிப்படும் சீனியர் ஃபாஸ்ட் பவுலர் இஷாந்த் சர்மா, இந்திய அணியில் இடம்பெறவில்லை.

இஷாந்த் சர்மா பெங்களூருவில் உள்ள தேசிய கிரிக்கெட் அகாடமியில் பயிற்சி பெற்றுவரும் நிலையில், காயத்திலிருந்து மீண்டுவரும் இஷாந்த் சர்மா, பந்துவீசி பயிற்சி பெற தொடங்கியுள்ளார். இது இந்திய அணிக்கு நம்பிக்கையளிக்கும் விஷயமாக அமைந்துள்ளது.

சீனியர் ஃபாஸ்ட் பவுலரும் ஆஸ்திரேலியாவில் பந்துவீசிய நல்ல அனுபவம் கொண்டவருமான இஷாந்த் சர்மா ஆஸ்திரேலியாவில் ஆடவில்லையென்றால் அது அந்த அணிக்கு அனுகூலமாக அமையும். ஆனால் இப்போது அவர் பந்துவீசி பயிற்சி பெறுவதால் முழு ஃபிட்னெஸ் பெற்றார் என்றால், அது இந்திய அணிக்கு அனுகூலமான விஷயமாக இருக்கும். அவர் பந்துவீசி பயிற்சி பெறுவது இந்திய அணிக்கு நம்பிக்கையளித்துள்ளது.