Asianet News TamilAsianet News Tamil

சுப்மன் கில் அவுட்டா? நாட் அவுட்டா? டிவி அம்பயரை கலாய்த்து தள்ளிய மீம்ஸ்!

மூன்றாவது நடுவர் சுப்மன் கில்லிற்கு அவுட் கொடுத்ததைத் தொடர்ந்து அவரை பலரும் விமர்சனம் செய்து வருகின்றனர்.

Is Shubman Gill out ot not out? netizens created memes regarding third umpire decision
Author
First Published Jun 11, 2023, 10:54 AM IST

இந்தியாவிற்கு எதிரான ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் முதலில் ஆடிய ஆஸ்திரேலியா முதல் இன்னிங்ஸில் 469 ரன்கள் எடுத்தது. இதையடுத்து ஆடிய இந்தியா 296 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. இதைத் தொடர்ந்து 173 ரன்கள் முன்னிலையில் ஆஸ்திரேலியா 2ஆவது இன்னிங்ஸை ஆடியது. இதில், 8 விக்கெட் இழப்பிற்கு 270 ரன்கள் எடுத்து ஆஸ்திரேலியா டிக்ளேர் செய்தது.

விராட் கோலி, ரஹானேவை நம்பியிருக்கும் இந்தியா – 4ஆம் நாள் முடிவில் 164 ரன்கள் குவிப்பு!

இதன் மூலமாக 444 ரன்கள் வெற்றி இலக்காக கொண்ட இந்திய அணி 2ஆவது இன்னிங்ஸை தொடங்கியது. இதில், ரோகித் சர்மா மற்றும் சுப்மன் கில் இருவரும் நல்ல தொடக்கம் கொடுத்தனர். ஒரு கட்டத்தில் ஸ்காட் போலண்ட் ஓவரில் சுப்மன் கில் ஸ்லிப்பில் நின்றிருந்த கேமரூன் க்ரீனிடம் கேட்ச் கொடுத்தார். ஆனால், அந்த கேட்ச் சர்ச்சையை ஏற்படுத்தியது.

கொஞ்ச நேரம் அந்த கேட்ச்சை மூன்றாம் நடுவர்கள் டிவி ரீப்ளேயில் சரிபார்த்தனர். எனினும், கள நடுவர் அவுட் கொடுத்ததன் மூலமாக அவர்களும் அவுட் கொடுத்தனர். ஆனால், எப்படி அவுட் கொடுக்க போச்சு என்று கேப்டன் ரோகித் சர்மா கள நடுவரிடம் விவாதம் செய்தார். மேலும், சைகை மூலமாகவும் கேட்ச் பிடித்தது குறித்தும் முறையிட்டார்.

கண்ணை மூடிக் கொண்ட நடுவர்; சந்தேகம் என்றால் நாட் அவுட் தான் – விரேந்திர சேவாக் விமர்சனம்!

ஆனால், கடைசியாக சுப்மன் கில் வெளியேறும் நிலைதான் வந்தது. எப்படியும் வெற்றி பெற வேண்டும் என்று குறிக்கோளோடு வந்த இந்திய அணிக்கு சுப்மன் கில் ஆட்டமிழந்தது ரோகித் சர்மாவிற்கு ஏமாற்றத்தை அளித்தது. கிரிக்கெட் ரசிகர்களும் கேமரூன் க்ரீனை விமர்சித்து வருகின்றனர். அது மட்டுமின்றி அவர் பந்து வீச வரும் போதும் கூட ரசிகர்கள் சீட்டிங் சீட்டிங் என்று கோஷம் எழுப்பினர் என்பது குறிப்பிடத்தக்கது.

விராட் கோலி, ரஹானேவை நம்பியிருக்கும் இந்தியா – 4ஆம் நாள் முடிவில் 164 ரன்கள் குவிப்பு!

இந்த நிலையில், மூன்றாவது நடுவர், ஆஸ்திரேலிய வீரர் கேமரூன் க்ரின், கள நடுவர் என்று ஒவ்வொருவரையும் விமர்சித்து நெட்டிசன்கள் மீம்ஸ் உருவாக்கியுள்ளனர். இது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

Follow Us:
Download App:
  • android
  • ios